பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 :

பவர்கள், சிவனுக்கே தொண்டு புரியும் நியமம் உடைய வர்கள், சிவசரிதங்களை விரும்பிக் கேட்பவர்கள், சிவ பெருமானத் தியானித்து மெய்ம்மயிர் பொடிப்பக் கண் ணிரரும்பி விதிர்விதிர்ப்பெய்துபவர்கள், நின்ருலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மன்ருடும் மலர்ப்பாதம் மறவாத சிந்தையினையுடையவர்கள், சிவ பெருமானுக்கு ஆட்பட்ட தம் அடிமைத்திறத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தி அதி ஒற் பயன்கொள்ளாத து.ாய நெஞ்சத்தினர். இங்குக் குறிக்கப்பட்ட எண் பெருங்குணங்களாலும் இவ்வுலகினை விளக்கும் பெருமை வாய்ந்த அடியார்களே பத்தராய்ப் பணிவார்கள் என்னுந் திருக்கூட்டத்தினராவர்.

(60) பரமனையே பாடுவார்

தென்தமிழும் வடமொழியும் ஏனைய திசை மொழியும் ஆகியவற்றில் இறைவனேயே பொருளாகக் கொண்டு இயற்றப்பெற்ற இயலிசைப் பாடல்களை ஒன்றிய மெய்யுணர் விளுேடும் இசை பொருந்த உள்ளம் உருகிப் பாடும் அடியார்கள் பரமனையே பாடுவார் என்னும் திருக்கூட்டத் தினராவர்.

(81) சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

படைத்த ல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்யும் பிரமன், திருமால் : உருத்திரன், மகேசுரன் , சதா சிவன் என்னும் ஐம் பெருங்கடவுளர் இருக்கும் ஐவகைத் தாமரைப் பீடங் களையுடைய ப த வி களைக் கடந்து, அட்டாங்கயோகத் துள், இயமம் நியமம் ஆசனம் பிராணயாமம் பிரத்தி யாகாரம் என்னும் ஐந்தனையும் பயின்று சித்தத்தை ஒருவழி நிறுத்தலாகிய தாரணையால் திகழொளியாயுள்ள சிவம் ஞானஒளி வீசி விளங்கும் நாதாந்தத்தில் சித்தத்தை நிறுத்துதலினலே சிவத்தினிடத்தே நிலை பெற்ற சித்தத்தை ஆடையவர்கள் சித்தத்தைச் சிவன்பால்ே வைத்த்ார்