பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

என்னும் திருக்கூட்டத்தினராவர். இவர்கள் மறைமுது முதல்வனகிய தில்லைச்சிற்றம்பலவன் தொண்டின்வழி நின்று அம்முதல்வனே அடைந்தோராவர்.

(82) திருவாரூர்ப் பிறந்தார்கள்

சிவபெருமான் மகிழ்ந்து விற்றிருந்தருளும் திரு. வாரூர்த் தலத்திலே பிறக்கும் பேறு பெற்றவர்கள் எல் லாரும் திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் சிவபெரு மானுடைய திருக்கணத்தினராவர். அவர்கள் திருவடிகளே வணங்கி ஒன்றிய மனத்தினையுடையார்க்கு உயர்ந்த வீட்டு நெறி அணிமையுடையதாகும்.

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் இவகை நாதர்கள் என்னும் உண்மையினேச் சிவபெருமான் நமிநந்தியடிகளுக்குப் புலப்படுத்தியருளிய் செய்தி இங்கு நினைத்தற்குரியதாகும்.

(83) முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்

சிவபெருமானது திருவருளினலே உ எண்மைi.iா'ை சிவாகம ஞானநெறியின்படி முறை தவருமல் காலங்கள் தோறும் வழிபாடு செய்வதிற் பேரார்வமும் அன்பும் உடையராய் நாள்தோறும் விடியற்காலையில் நீராடித் திருநீறணிந்து திருவைந்தெழுத்தோதிக் காலே, நண்பகல் , இரவு என்னும் மூன்று காலங்களிலும் சிவலிங்கத் திருமேனியைத் திண்டி அருச்சிக்கும் ஆதிசைவ அந்தனர். கள் முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் என்னும் திருக்கூட்டத்தினராவர்.

(64) முழுறுே பூசிய முனிவர்

அறநெறியில் ஒழுகித் தத்துவங்களை நன்குணர்ந்து நீதி நெறியில் தவருதவர்களாய்த் தொன்றுதொட்டுவரும் மும்மலங்களை அறுத்த வாய்மையையுடைய அரிய தவ. முனிவர்கள் நியமம் தவருது செய்யும் நித்தியாக் கினியில் விளை க்து எடுத்த திருநீற்றினைப் புதிய