பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

பரத்திரத்தில் வைத்துக்கொண்டு சிவபெருமானே வணங்கி அவரது திருவருள் வண்ணமாகிய திரு நீற்றினை உடல் முழுவதும் பூசிக்கொள்வார். இப் பெரியோர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப் போற்றப் பெறுந் திருக்கூட்டத்தினராவர்.

கன்றீன்ற பசுவின் சாணத்தைச் சத்தியோசாத மந்திரத்தில்ை ஏற்றுச் சிவமந்திர்ங்களால் உண்டாக்கப் பட்ட சிவாக்கினியில் இட்டு எடுத்த திருநீறு கற்பம் எனப்படும். காட்டில் உலர்ந்த பசுஞ்சாணத்தைக் கொணர்ந்து கோ சலத்தைவிட்டுப் பிசைந்து அத்திர மந்திரம் ஓதி ஓமத்தியில் இட்டுச் சிறப்புற வெந்த நீறு அதுகற்பம் எனப்படும். காட்டில் மரங்கள் பற்றியெரிந்: தமையால் வெந்த நீறும் கொட்டில் முதலிய இட வகைகள் தீப்பற்றிக்கொள்ள வெந்த நீறும், செங்கற்களைச் சுட்ட தீயினல் விளைந்த நீறும் ஆகியவற்றை உண்டையாக்கித் திருமடங்களில் விளங்கும் சிவாக்கினியினல் விதிப்படி, நீருக்கப்பட்டவை உபகற்பம் எனப்படும்.

(85) அப்பாலும் அடிச்சார்ந்தார்

சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களால் ஆளப்பெறும் தமிழ் நாட்டுக்கு அப்பாலுள்ள பிற நாடு களிற் பிறந்து சிவபெருமான் திருவடிகளை அடைந்தவர் களும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத். தொகையிலே போற்றப்பெற்ற சிவனடியார்கள் வாழ்ந்த, காலத்துக்கு முன்னும் பின்னும் தோன்றிச் சிவபெரு, மானுடைய திருவடிகளைச் சார்ந்தவர்களும் அப்பாலும் அடிச்சார்ந்தார் என்னும் திருக்கூட்டத்தினராவர்

(66) பூசலார் காயஞர்

தொண்டை நாட்டில் திருநின்றவூர் என்னும் பதியிலே அந்தணர் குலத்திற் பிறந்தவர் பூசலார் சிவ பெருமானிடத்தும் அடியாரிடத்தும் பேரன்புடைய இவர்க்