பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



மருமகனே தேவர்களாலே புகழப்பெற்ற வேடர்கள் பெற்ற, வள்ளி நாயகியாரோடு சிறப்புற விருக்கும் அழகிய மார்பை உடையவனே, மேலான வேதங்கள் மிகுதியாக இசைக்கப்பெற்ற சீடருட மங்கை என்னும் பெயரையுடைய திருப்பதியில், விரும்பி எழுந்தருளி இருக்கும் பெருமானே இளவேனிற் காலத்திற்கு உரியவனான மன்மதன் ஐந்து மலர்க்கணைகளை விடுவதனால் வருத்தமுற்று. தெருக்கள் தோறும் நின்று. மாதர்களிடத்தில் என்னைக் காக்கும் வேளை இது என்று சொல்லி அணுகி, அவர்கள் இசையும்படி அவர்கள் பாதங்களில் விழுந்து காம வெப்பம் நீங்க. நட்புக்கு உரியதான் பல மொழிகளைக் கூறி தேனைக் காட்டிலும் இனிமையாகிய பரிமளிக்கும், இதழமுதை உண்டு. குளிர்ச்சி பொருந்தியுள்ள தனங்களிலே முழுகி, வருந்திச் சம்பாதித்த பொருளெல்லாம் வீணாக அழிந்துபோம்படி இந்த வீண் முயற்சியைச் செய்து பெறத்தக்க நல்ல கதியைப் பெறாமல், இந்த விதமாகவும் துன்பப்படுவேனோ?

இளவேனிற் காலம் காம இன்பந் துய்ப்பார்க்கு மிகுந்த ஏற்ற காலம் ஆதலின் மன்மதனை வேனிலான் என்றார். இதனாலன்றோ,

ஆரமுர் ஆரச் சேரும் அருங்ண நீருர் பூவுச் சரவென் மதி வரவும் இதுங்/ தென்ரர் காலுச் ஒரு இரண்டு மெய்/ம் உருகுவர் உருகும் வண்ணர் ாரண மகுடகுர் குட்ட உந்து வகுத்த கரம்" என்றார் வில்லிபுத்துரார்.

மன்மதன் ஐமலர்க் கணைகளாவன: முல்லை, அசோகு, குவளை, தாமரை, மாம்பூ என்பனவாம். தேனினும் மணந்த தேனினும் இன்சுவையை உடைய என்றும் பொருள் கூறுவர். இதனாலன்றோ திருவள்ளுவ நாயனாரும், -