பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் 令 57

சிலைவாங்கிய நாரண னார்மரு

மகனாங்குக னே பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமானே!

யானைப்படையும் தாவும்படியான குதிரைப் படையும். திரண்ட காலாட்படையும், ஒன்றாகக் கூடி இருக்கின்ற துரியோதனன் முதலியவர்கள், யுத்த களத்தில் இறந்தழிய பாரத யுத்தத்திற் சென்று. பெருமை பொருந்திய பாண்டவர்களின் தேரிலே, கட்டிக் கிளம்பிப் பாயும் குதிரைகளைச் செலுத்திய தேரோட்டியாகிய, ஒளி வளர்ந்துள்ள சுதரிசனம் என்னும் சக்கராயுதத்தை உடையவனும், அரியும் இரகுராமனும், அலைகள் ஓங்கி ஒலிக்கின்ற கடலும், வாலியாகிய குரங்கரசனும், மிகவும் வளர்ந்தள்ள ஏழு மாமரங்களும், பத்துத் தலைகளையுடைய இராவணனாகிய அரக்கர் அரசனின் பொன்முடி பொடிபடும்படி வில்லை வளைத்தருளிய திருமாலினுடைய மருமகனாகிய குகக் கடவுளே! சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாகிய சிறந்த மா மலையின் கண்ணே எழுந்தருளி இருக்கும் பெருமானே! செவ்வரி பரந்துள்ள சேல் மீனோ கயல் மீனோ என்று சொல்லப்படும், மானையும், வடித்து எடுத்துச் செய்யப்பட்ட வேலாயுதத்தையும் நீலோற்பல மலரையும், மாம் பிஞ்சினையும் பகைவர்களின் உயிரை வாங்கும் வேலாயுதத்தையும் ஒத்த கண்களையுடைய பெண்கள், காமுகராகிய காளையரைப் பிடிக்கும்படி வீசும் வலையினாலும் வளர்கின்ற கோங்கினுடைய இளமையான சிறப்பான அரும்பை நிகர்த்த முலைகளின் மேல் வைத்த ஆசையினாலும் முகத்தினது மயக்கத்தாலும். செழுமையான மாமரத்தினது தளிரைப் போன்ற, நிறம் பொருந்திய உருவத்தினாலும், இருளை நிகர்த்த நீண்ட கூந்தலின் நிழலிலே காம மயக்கங் கொண்ட படுக்கையின் மேலே பொருந்த, இனிமையைக் கொண்ட கோவைக்கனி போன்ற

1 |