பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



எழுபரி தூண்டிய சாரதியாகியது கண்ணனாகி பார்த்னுக்குப் போர்க்களத்தில் தேரோட்டியதை, இதனாலேயே கண்ணனுக்குப் பார்த்த சாரதி என்றோர் திருநாமம் உண்டாயிற்று.

கடலில் கணை விட்டது. கடலில் அணை கட்ட நினைத்து வருணனை வேண்டியபோது வராமையால் சினந்து அம்பு ஒன்று ஏவியதை சிலை வாங்கிய வில்லை, வளைத்த நாரணன் - 'உலகுக்குத் தலைவன். நீரின்மேல் உறங்குவன் என்பன வாதிப் பொருள் தரும் காரணப் பெயர். வேங்கடம் என்பதற்கு அடியார் பாவங்களை நீறாக்குவது. எல்லாச் செல்வங்களையும் தருவது என்பது ஆதிப் பல் நல் பொருள் குறித்த சொல்.

"பாண்டவர் சகாயனும், சக்கராயுதனும், வருணனை - வாலியை - மராமரத்தை இராவணனைச் சினந்து வில்லை வளைத்தருளியவரும் ஆகிய திருநாரணனுக்கு மருமகனே! மாதர் மயக்கில் விழுந்து கெடும் என் கொடு மோகவிகாரம் நீங்க உனது இரு தாண் மலர் அருள்வாய்" என்றது கருத்து.

32.தான் தத்தன தத்தன தத்தன தான் தத்தன தத்தன தத்தன தான் தத்தன தத்தன தத்தன - தனதான்

ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச

னாக மக்கலை கற்றச மர்த்திகள் ஆர்ம னத்தையும் மெத்திவ ளைப்பவர்தெருவூடே

ஆர வட்டமு லைக்குவி லைப்பணம்

ஆயி ரக்கலங் கொட்டிஅ ளப்பினும் ஆசை யப்பொரு ளொக்கந டிப்பவ ருடன்மாலாய்