பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



அலங்காரமாக, நெருங்கிய நகத்தின் முனையினால் குறிகள் அழுந்தும்படி பலவித ஆடல்களைச் செய்து இதழின் அமிர்தமாகிய ஊறலை உண்டு இடை முறியும்படி கொங்கைகளின் மேல் விழுந்து, மனமும் வேறாக, கூடும் மாதர்களின், வஞ்சகத்தை உடைய இன்ப சுகத்தில் நீங்கும் வண்ணம், மனந் தெளிவடைந்து உள்ளன்போடு செம்பொருள் யோகத்திலே மனமானது உருகும்படியான மெய்ஞ் ஞானத்தையுடைய, ஆகம சாத்திரங்களிலே மிகப் பயின்ற அறிவை உடையவர்கள், சிந்திக்கின்ற அழகைக் கொண்டுள்ள பாதச் சிலம்பைத் தரித்துள்ள, இரண்டாகிய குளிர்ச்சி பொருந்திய, செந்தாமரை மலரை நிகர்த்த மெதுவமைந்த அழகிய நின் தாள்களைத் தந்து ஆள்வாயாக.

இன்ப ஊடல் கூடல் காலத்து மாதர்களுக்கு வியர்வு தோன்றும் அதுவும் அழகுடையதாகக் காணும். பின் மெலிவால் தேகம் தளர்ந்து வாடும். ஆதலினால், அளக பாரமலைந்து குலைந்திட வதன வேர்வு துலங்கி நலங்கிட என்றார். இதனாலன்றோ இன்னின்னவை அழகுடையன எனக் கூறும் ஒரு வெண்பாவில் இதனை முதற் கூறினார்.

கரதர் தணிவினைத்த தணிக கதிந்த விதத்தரைத்த னே?. நிதர் கொடுத்தினைத்த தாத கொடுஞ்சார் மட் உடுத்துணத்த கண் மர்"

மாதர் ஆசையில் வீழ்ந்து போகந்துய்ப்போர் அறத்தை மறந்து ஒழிவர். ஆதலின் முலைமேல் வீழ்ந்து உளமும் வேறு படும்படி யொன்றி.டு என்றார். ஒன்றிடல் - ஈருடலும் ஒருடல்போல் கட்டி பிணைந்திருத்தல்.

அறிவினோர்க் கருதங்கொள்ள சிலம்பணி - கற்றறிந்த அறிவு உடையவர்கள் நினைக்கும்படியான முத்தி இன்பந் தரும்