பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



பிரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ

பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு பிணிநினமுமுணமவுசெய்து பேயோடுமாடல்செய - வென்றதீரா!

குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருடக்

கரடிபலி திரகடிய வாரான கானின்மிகு குளிர்கணியின் இளமரம தேயாகி நீடியுயர் -

- குன்றுலாவி

கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய

வொருபுறம் துறவளரு மாதாபெ றாவருள் செய் குமரகுரு பரவமரர் வானாடர் பேணவருள் -

- - தம்பிரானே!

பிறைபோலும் பற்களை உடைய போரைச் செய்யும் அசுரர்கள் நீங்காமல் நிலத்தில் விழவும் ஏழு உலகங்களும் நடுங்கவும் பதினான்கு உலகமும் கதறவும் பெண்ணும் ஆணும் ஆகிய யானைகளின் போரிலே உள்ள சேனை வகுப்புகள் அழியவும் திக்குகளில் நிலையாயிருக்கின்ற எட்டு யானைகளின் உடம்பு நீங்கவும், உயர்ந்த மலைகள் இடியவும், பெரிய ஆழியில் புழுதி எழுப்பவும், பெரிய வயிற்றைக் கொண்டுள்ள பெருமை பொருந்திய காளிகாதேவி, குட்டைப் பூதங்களோடு பிணத்தையும் கொழுப்பையும் உண்டு, பேயோடு கூத்தாடவும், வெற்றி கொண்ட தீரனே வேடர்கள் பெற்ற பூங்கொடி போன்ற வள்ளியின் திருவடிகளை வெட்கம் இல்லாமல் போய்த் தடவுதற்கு கரடியும் புலிகளும் திரிகின்ற கடுமையான நீட்சி பொருந்திய காட்டிலே சிறந்த, குளிர்ந்த வேங்கை மரத்தின் இளமை வாய்ந்த மரமாகி, நீண்ட உயர்ந்த குன்றுகள் தோறும் உலாவி, கொடுமை மிகுந்த ஒரு முயலகன் என்னும் பூதத்தின் மேல் கூத்திடுகின்ற