பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

39



நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென

உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென நிரைத்த அண்டமு கிடுகிடு கிடுவென

வரைபோலும்

நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு

சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர அடுதீரா!

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு புழைக்கை மும்மத கயமுக மிகஉள சிவக்கொ முந்தென கணபதி யுடன்வரும்

இளையோனே!

சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய

பரற்குள அன்புறு புதல்வ! நன் மணியுகு திருப்ப ரங்கிரி தனிலுரை சரவண பெருமாளே.

கடலை நிரம்பச் செய்து எழும் தெள்ளிய அலைகள், மொகு மொகு மொகு என்னும் ஒலியைக் கிளப்பவும், மார்பாலுர்ந்து செல்லும் தன்மையை உடையதாகிய பாம்பாகிய ஆதிசேஷனது, தலையானது, நெறுநெறு என்ற ஓசையோடு முரியவும், வரிசை வரிசையாகிய உலகங்களும், கிடு கிடு கிடு என்று நடுங்கிடவும், மலையைப் போன்று. உயர்ந்தோங்கிய, உறுதியாகிய வீரக்கழலை அணிந்த அசுரர்களுடைய மார்போடு, தலைகளினுடைய கொடிய குவியல்களும், மலைபேர்லக் குவியலாக விளங்கி நிற்க, பெரிய கொழுப்பின் குழம்புடனே, பெருகிய இரத்தங்கள் வழியவும் போரைச் செய்யும் தைரியத்தை உடையவனே வல்லமையையுடைய கருமை நிறம் வாய்ந்த கேசத்தை உடைய உமாதேவியாரின், கருணையைப் பெற்றுள்ள, துளையோடுள்ள தும்பிக்கையையும், மூன்று மதங்களை