பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



யமுடைய, யானையின் முகம், சிறக்க உண்டாகிய, விநாயகக் கடவுளோடு, சிவக்கொழுந்தென்று கூறும்படி, தோன்றி வரும்படியான இளமைக்கோலம் உடையவனே கோபத்தோடும், யமனானவன் உதைபடுமாறு, திருவடியைத் தூக்கியருளிய சிவபெருமானுக்கு உள்ளத்து அன்பு தங்கிய புத்திரனே! நல்ல முத்துக்களைச் சொரிதரச் செய்யும், திருப்பரங்கிரி என்னும் சிறந்த திருத்தலத்தில் வசித்திருக்கும். சரவணம் என்னும் மடுவில் தோன்றி அருளிய பெருமானே கறுமையாகிய மைதீட்டப் பெற்ற, இரண்டு கண்களாகிய வேலாயுதத்தைக் கொண்டு, கிட்டிச் சென்று மனத்திற்பட, வீசுகின்ற காலத்தில் ஒப்புச் சொல்லற்கரிய கோவ்வைக் கனியை ஒத்த இதழில், மதுரச்சுவை பொருந்திய, இதழமுதைச் சொரிகின்ற, ஒப்பற்ற புன் நகையினால், வளைந்த கழுத்தின் கண்ணே உண்டாவதாகிய ஓசை என்னும் வலையைக்கொண்டு வீசி, எமது வீட்டிற்கு எழுந்து வருவீராக! என்று மனது இளகும்படிக்கும், ஒரு கவலையைக் கொள்ளும்படிக்கும், வீட்டில் அழகாக இட்டுக்கொண்டு சென்று. வாசனையை உடைய பஞ்சணைகளாலாகிய அமளியின்மேல், ஆவல் உண்டாகும்படி, கழுத்தைத் தழுவி வளைத்து, இன்ப டற் செருக்கில், மார்பின் இரண்டு கொங்கைகளும், காளையர்களின் மார்பத்து நேரிலே பொருந்த உகிரால் அழுந்த, இதழ் அமழ்தத்தைச் சுவைத்து அருந்திய, கழுத்தின் மத்தி இடத்தில், பாவனையாகக் கிளம்புகின்ற ஒலி, குமு குமு குமு என்னும் ஓசையோடு, ஒலியை உண்டாக்கிட நன்றாக, மனமானது சுழன்றிட வஞ்சிக்கும். விடத்தை ஒத்த இளைய பெண்களால் வரும் துன்பமானது என்னை விட்டு நீங்க, தொண்டனாகிய எனக்குக் கிருபையைச் செய்வாயாக

கறுக்கும் அஞ்ஞன விழிஇணை கறுக்கும் விழி . கோபிக்கும் விழி, எனக் கறுக்கும் என்பதனை விழிக்கும்