பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

77



என்பது பொருள். நம் எல்லாராலும் வணங்கப் பெறும் பெருமையை உடையவனே என்பதாம். முருக அழகை உடையவனே என்பது பொருள். குருபர உயர்ந்த ஆசானாக விளங்குபவனே என்றும், பரனுக்கும் குருவாக விளங்கி நின்றவனே! என்றும் பொருள் தரும். வளர் அறுமுக - அழகும் அருளும் வளரும் ஆறு திருமுகங்களை உடையவனே என்பது பொருள். குக - அடியார் உள்ளக் குகையில் உறைபவனே இை

அனைத்தும் அண்மை விளிகள். -

துறையில் அலை எறி திருநகர் உறைதரு பெருமாளே என்ற தில் 'தன்னிடத்தே சார்ந்தார்க்குப் பிறப்பாகிய அலைச்சலைச் சுழித்தெறியும் அழகிய நகராகிய திருச்செந்தூர் எனவும் பொருள்பட நின்றது" என்பர் ஒரு பிறர்.

குழலோசையாலேயே செயற்கு அரியன செய்பவனும், வேதங்களால் புகழப்படுபவனும், நீண்டோனுமாகிய திருமாலின் மருகனாகிய எவ்வுயிர்க்கும் துணைவனே குணதர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக தீயார் தொடர்பை நீக்கிவிடுவாயாக என்பது குறித்தது.

பிணி நீங்கச் சுகம் வருவதுபோலத், தீயார் தொடர்பு நீங்க

நல்லார் தொடர்பு எய்தும் அதனால் ஞானம் பெருகி வானவர் வழுத்தும் வீடு பெறுவேன். இது செய்தற்கு நீயே வல்லவன்: நீயே தக்கவன் நீயே துணையாவோன் என்றனர்.