பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



நீர் அழைத்து, உன் பாதுகை தேவரீரது திருவடியில் அணியும் பாதுகையைக் கொடுத்தருளும். நான் அந்தப் பெருங் கருணைக்கு இலக்காகுவனோ?

அனிச்சம் - இது ஒருவகை மலர் மிக மென்மையை உடையது மோந்த மாத்திரத்தில் குழைந்துபடுந் தன்மையது.

கோக்க குழையுர் அணிச்சர்" என்னும் திருக்குறளால் அறியலாம். கார்முகம் வில் இங்குப் பஞ்சு கொட்டும் வில்லைக் குறித்தது. பஞ்சின் கோதுகளை நீக்கி நுண்மைப் படுத்துவதற்கு வில்லாலடிப்பது வழக்கு துவட்பஞ்சு தூளாகிய பஞ்சு, துகட்பஞ்சு என்றது துவட்பஞ்சு என மருவியது. இனி துவண்டபஞ்சு எனினும் ஆம் தடாகம் விடா அனம்: அன்னம் அனம் என்றானது தொகுத்தல் விகாரம். அன்னத்தின் இயல்பு தடாகத்தில் வசிப்பதாதலின், தடாகம் விடா என்றார். தூவி - சிறகு அன்னத்தின் மெல்லிய சிறகுகளை அணையாக்குதல் நம் நாட்டுப் பண்டைக்கால வழக்கு இன்று மேலை நாட்டினர் பறவைகளின் சிறகுகளை அணையாக்கி பயன்படுத்து கின்றனர். மாதர்கள் பாதம் மென்மைய தாதலின், துவட்பஞ்சினும் அன்னத்தின் தூவியினுங் குலாவிய சீறடி என்றார். சீறடி - சிறிய பாதம். சிறுமை + அடி, சீறடி என்றாயிற்று சிறுமை என்ற பண்பின் ஈற்று மை கெட்டு, இடை உகரம் இகரமாகி, ஆதி நீண்டது. இதற்கு

%ரு பேதன் இடை உகரம் இாதல் ஆதிநீட்சிப் அது அகரர் ஆயதம் தன்னொது இட்டன் முன்னன்ர ம்ெ தினதன் இன மகன் இணயவுர் பன்டர்கின்/ே"

என்றது நன்னூல் சூத்திர விதி.

அருக்கன் சூரியன். மாதர்கள் பாத மென்மையை,