பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



திருப்பழநிமலை (திருவாவிநன்குடி)

15. தனணதன தான் தந்த தனனதன தான் தந்த

தனனதன தான் தந்த தனதான்

கருவில் உருவாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து

கலைகள் பல வெதெ ரிந்து மதனாலே

கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார்பு தைந்து

கவலை பெரி தாகிநொந்து மிகவாடி அரகரசி வாயவென்று தினைமுநினை யானின்று

அறுசமய நீதி ஒன்றும் அறியாமல் அசனமிடு வார்கள் தங்கண் மனைகடலை வாசல்நின்று அனுதினமு நாண மின்றி அழிவேனோ!

梁_事莎亚_珪一 மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள் அரங்கர்

உலகளவு மால்ம கிழ்ந்த மருவோனே!

உபயகுல தீப வங்க விருதுகவி ராசசிங்க

உறைபுகலி யூரி லன்று வருவோனே!

பரவைமனை மீதி லன்று இருபொழுது தூது சென்ற

பரமனரு ளால்வ ளர்ந்த குமரேசா

பகையசுரர் சேனைகொன்று அமரர்சிறை மீளவென்று பழநிமலை மீதி னின்றி பெருமாளே!

ஆதிசேடனது படத்தின் மேலே, அறிதுயில் கொண்ட, பெரிய பெருமாள் என அடியார்களால் அழைக்கப்பெறும் திருவரங்கப் பெருமானும், நிலவுலகத்தைத் தன் ஒரடியால் அளந்தருளியவருமாகிய திருமால், மகிழும் படியான மருகனே! இரண்டு குலங்களுக்கும் தீபம் போன்றவனே! வெற்றிக்கு