பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$

த கோவேந்தன், டி லிட் 9?

அடையாளமாகிய விருதுகளைப் பெற்ற பாவேந்தராக வசிக்கத் தகுந்த சீகாழியில் முன்னாளில் திருஞான சம்பந்த மூர்த்தியாக அவதரித்தருளி வந்தவனே திருவாரூரில் பரவை நாச்சியாருடைய திருமனைக்கு அக்காலத்தில் இரண்டு முறை. சுந்தர மூர்த்திகளுக்காகத் தூதுபோன, சிவ பெருமான் திரு. அருளினால், வளர்ந்தருளிய குமரேசனே பகைவர்களாகிய அசுரர்களின், படைகளைத் தலைவர்களோடு கொன்றழித்து தேவர்கள் சிறையினின்றும் மீளும்படிக்கு வெற்றியைக் கொண்டு. பழநிமலையின் மேலே, நிலைபெறத்தங்கி, நின்றருளும் பெருமானே!

தாய் வயிற்றுக் கருப்பையில் உருவடைந்து பின் வெளிப்பட்டு வந்து, வயசு ஏறும்படியான அளவுகளுக்குத் தக்கபடி உடல் வளர்ச்சி அடைந்து, கலை அறிவுகள் பலவற்றை உணர்ந்து, மன்மதனாலே, கருத்த நிறத்தையுடைய கூந்தலைக் கொண்டுள்ள பெண்கள், அந்தப் பெண்களின் அடியின் குறி மார்பிலே அழுந்தப் பதியப் பெற்று மன வியாகூலம் அதிகரித்து, மன தழிந்து, அதிகமான வாட்டத்தையடைந்து, அரகர சிவாய என வாயினாற் கூறி, ஒருநாளும் நினையாது. இருந்தும், ஆறு சமயங்களின் ஒழுங்குகளை, யாதொன்றையும் தெரிந்து கொள்ளாமல், சோறு கொடுப்போருடைய, வீடுகளின் தலைவாசலிலே நின்று, ஒவ்வொரு நாளும் வெட்கம் இல்லாதபடி அழிந்து கெட்டுப்போவேனோ.

நீர்த்தன்மையவாய சுக்கில சுரோணிதம் கூடிக் கருப்பையிலே உருவடைதலின், கருவின் உருவாகி என்றார். வயதுக்கேற்றபடி உடல் வளரும் ஆதலின், வயதளவிலே வளர்ந்து என்றார். நின்னருள் இல்லாமையால் பல கலைகளைக் கற்றும் பெண்கள் மாயையிற் சிக்கினேன் என்பார். கலைகள் பலவே தெரிந்து மதனாலே " மிகவாடி என்றார்.