பக்கம்:திருவருட் பயன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



80

கெடுத்தல்-இழத்தல்; காணமுடியாதவாறு இழந்துவிடுதல். ஞானந்தலை-ஞானத்துக்குள். ஞானம்-திருவருள். தலைஏழாமுருபு. தற்கேடர்-தன்உடம்பினை மறந்து தேடும்பித்தர்.

மலைமேல் இருந்துகொண்டே மலையைத்தேடினவர் போலவும், பூமியிலேயிருந்து பூமியைத்தேடினவர்போலவும், தானமாகிய அறிவை (த்திருவருளை) க்கெடுத்துத் தேடுபவர்கள் தம்முடம்பினைக் காணாது தேடும் பித்தரோடொப்பர் என்பதாம்.

     "எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான்
      எங்ங் கெனத்திரிவா ரின்"
                (நன்னூல் சங்கர நமச்சிவாயருரை மேற்கோள்)

என வரும் பழம்பாடல் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கதாகும்.

உயிர்கள் திருவருளாகிய ஞானத்துள்ளேயிருந்தும் ஞானத்தை அறியாதிருப்பதற்குக் காரணம் ஞானத்தின் குறையோ? அன்றி உயிரின் குறையோ? என வினவிய மாணாக்கர்க்கு அதனை அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும்.

      38. வெள்ளத்துள் நாவற்றி யெங்கும் விடிந்திருளாம்
          கள்ளத் தலைவர் கடன்.

இ-ன் : நிறைந்த நறுநீரின்கண்ணே நின்றும் அதனைப் பருகாது நா வறண்டும், எவ்விடத்தும் இருள் நீங்கி விடிந்திருக்கவும் மயங்கி நிற்கும் மடவோரது தன்மையே, தாம்நிறைந்த அருளோடு கலந்துநின்றும் அதனால் வரும் பேரின்பத்தை நுகராத வஞ்சத் தலைமையுடைய ஆன்மாக்களது முறைமை. எனவே உயிர்கண்மாட்டுளதாய குறையேயன்றி அருளின் குறையன்மென்பதாம் என்க.