பக்கம்:திருவருட் பயன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 எய்தியவழி அக்கருணமறமாகிய செய்கைமாறிக் கருணை யெனப்படும் முன்னேப் பராசத்தி ரூபமாய் உயிர்கள்மாட்டுப் பதிதலே சத்தி நிபாதம் எனப்படும். சத்தி-திருவருள். நிபாதம்-வீழ்ச்சி, என்றது வீழ்ந்து ஆழப்பதிதலே. ஒரு கூட் டத்தின் நடுவே கல் வந்து வீழ்ந்தால் அதன் வீழ்ச்சி, அங் குள்ளவர்களே அவ்விடத்தினின்றும் விரைந்து அகலும்படி செய்யும். அதுபோல ஆன்மாவின்கண் சத்திநிபாதம் நிகழ்ந்த அளவிலேயே அஃது அவ் ஆன்மாவையே மனைவி மக்கள் முதலிய உலகத்துழனியின் அச்சம் நிகழ்ந்து, அவ்வுலக வாழ்க்கையினின்று அஞ்சிப்போந்து உண்மைக் குரவனே நாடிச்செல்லுமாறு செய்வித்தலின், அவ்வொப்புமை தோன்ற சத்திநிகழ்ச்சி என்னது சத்திவீழ்ச்சி என்று ஒதப்பட்டது. ஆன்மாவின்கண் இருவினேயொய்பு மல பரிபாகம் சத்தி நிபாதம் என்பவை முறையே நிகழ்ந்த நிலையில் இறைவன் குருவாகி எழுந்தருளி வருவான் என்பது, “சத்திநிபாதம் தருதற் கிருவினையும் ஒத்துவருங் காலம் உளவாகிப்-பெத்த மலபரி பாகம் வருமளவிற் பன்னுள் அல்மருதல் கண்ணுற் றருளி-உல்வா தறிவுக் கறிவாகி அவ்வறிவுக் கெட்டா நெறியிற் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக் கருண திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென் ருேர்திருப்பேர் கொண்டு’ (கந்தர்கலிவெண்பா, கண்ணி-22-24) எனவரும் குமரகுருபர அடிகள் வாய்மொழியால் நன்கு புலப்படுத்தப்பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும். குருமேனிதாங்கி எழுந்தருளிய இறைவல்ை அறிவுறுத்தப் படும் பொருள்கள் யாவை என வினவிய மானுக்கர்க்கு