பக்கம்:திருவருட் பயன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.உமாபதிசிவாசாரியார் வரலாறு

சைவநன்மக்களால் சந்தானாசிரியர் எனப்போற்றப் பெறும் நால்வருள் நான்காமவராக வைத்துப் போற்றப் பெறுபவர் கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியார் ஆவர். இவர் வாழ்ந்தகாலம் கி.பி.பதினாலாம் நூற்றாண்டாகும். இக்காலப்பகுதியில் நம் தமிழகத்திற் பிறசமயத்தினரும், பிறமொழியாளருமான மகமதியர்களும் கன்னடமொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட விசயநகர வேந்தர்களும் தம் தம் மொழிகளே அரசாங்க மொழியாகக்கொண்டு ஆட்சிபுரிந்தமையால் அவர்களது ஆட்சியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது. சமயக் கொள்கை பற்றியும் பொருளுடைமை பற்றியும் தமிழ் மக்கள் பல்வேறு அல்லல்களுக்குட்பட்டு உரிமையிழந்த காலம் இது. இக்காலத்திலே தான் தில்லையில் தில்லைவாழந்தணர் மரபிலே உமாபதிசிவாசாரியார் தோன்றினார். வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றிய இவர், செந்தமிழும், வடமொழியும் நன்குபயின்று தேர்ந்தார். வேதங்களையும் சிவாகமங்களையும் ஒதியுணர்ந்தார். தில்லை மூவாயிரவருள் ஒருவராய்த் தில்லைச்சிற்றம்பலப் பெருமானது திருமேனியினைத் தீண்டிப் பூசிக்கும் நற்பேறுடைய இப்பெருந்தகையார், ஒருநாள் சிவிகையிலமர்ந்து பகல் விளக்குடன் திருக்கோயிலுக்குச் சென்றார். அந்நிலையில் மெய் கண்டதேவர் மாணவராகிய அருணந்தி சிவாசாரியார்க்கு மாணவராகிய மறைஞானசம்பந்தர் என்பார், இவரது பரிபக்குவத்தினை நன்குணர்ந்து பட்ட கட்டையிற் பகற்குருடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/14&oldid=513089" இலிருந்து மீள்விக்கப்பட்டது