பக்கம்:திருவருட் பயன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



12

ஏகுதல் பாரீர்” என்று இவர் செவியிற்படுமாறு கூறினார். இச்சொல்லைச் செவிமடுத்த இவர், சிவிகையைவிட்டுக் குதித்து விரைந்து ஓடி மறைஞானசம்பந்தர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவ்வாசிரியர்பால் மெய்யுணர்வு உபதேசம் பெற்றுச் சிவஞானச் செல்வராயினர். பண்டைக் குலத்தை மறந்து தொண்டக்குலத்துள் முதல்வராகிய உமாபதிசிவாசாரியார், தில்லையின் கீழ்த்திசையிலுள்ள கொற்றவன்குடியில் எழுந்தருளியிருந்து, தம்மையடைந்த மாணாக்கர் பலர்க்கும் சிவ தீக்கை செய்து சிவஞான உபதேசம் செய்தருளிச் வசை சித்தாந்த நுண்பொருள்களையும், சைவத் திருமுறைகளின் பெருமையினையும் விரித்துரைக்கும் சிறந்த பல நூல்கள் இயற்றியருளினார். சிவஞானச்செல்வராகிய இவரது திருவருட்பெற்றியை யுணர்ந்து பேரன்பினால் இவரது திருமடத்திற்கு நாள்தோறும் விறகு கொணர்ந்து கொடுத்தலை நியமமாகக் கொண்ட பெற்றான் சாம்பான் என்பானது வேண்டுகோட்கிணங்கித் தில்லைச் சிற்றம்பலமுடையானாகிய இறைவன்,

"அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங்

குடியார்க் கெழுதியகைச் சீட்டு-  படியின்மிசைப்
பெற்றான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து
முத்தி கொடுக்கை முறை "
என்றபாடலை எழுதிக்கொடுத்தருள, அதனைப்பெற்ற உமாபதி சிவாசாரியார், அவ்வண்ணமே அவனுக்குப் பேதமறச் சிவதீக்கைசெய்து இப்பிறவியிலேயே சிவப்பேறு நல்கினார் என்பதும், அதனை நம்பாமல் ஐயுற்ற சுற்றத்தார் முதலிய மற்றறையவர்கள் காணத் தம் திருமடத்தில் அபிடேக நீரிற்செழித்து வளர்ந்திருந்த முள்ளிச்செடிக்கும் அம்முறையிலேயே சிவ தீக்கைசெய்து முத்திகொடுத்தருளினார் என்பதும் இவ்வாசிரியரைக் குறித்து வழங்கும் செவிவழிச் செய்திகளாகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/15&oldid=513145" இலிருந்து மீள்விக்கப்பட்டது