பக்கம்:திருவருட் பயன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



13

இவரால் இயற்றப்பெற்ற நூல்கள்; சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக் கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்பநிராகரணம் என்னும் சித்தாந்த நூல்கள் எட்டும், கோயிற்புராணம், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராணசாரம், திருப்பதிக்கோவை என்பனவும், வடமொழியில் பவுட்கரம் என்னும் உபாகமத்திற்கு எழுதிய விருத்தியுரையும் ஆகும். இவ்வாசிரியர் சங்கற்பநிராகரணம் என்னும் நூலினை 'ஏழஞ்சிருநூறெடுத்த ஆயிரம் வாழுநற் சகனம் மருவாநிற்ப இயற்றியதாக அந்நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருத்தலால், அந்நூல் சாலிவாகன சகம் 1235-க்குச் சரியான கி.பி. 1313-ல் இயற்றப்பெற்றதென்பது நன்கு விளங்கும்.

சிவப்பிரகாசம் முதலாகச் சங்கற்ப நிராகரணம் ஈறாக இவரால் இயற்றப்பெற்ற சித்தாந்தநூல்கள் எட்டினையும் 'சித்தாந்த அஷ்டகம் என்ற பெயரால் வழங்குதல் மரபு. இங்குச் சொல்லப்பட்ட எட்டு நூல்களுள் உண்மைநெறி விளக்கம் என்பது உமாபதி சிவாசாரியாரால் இயற்றப் பெற்றதன்றென்றும், இந்நூலின் இறுதியில்

"எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்
 குண்மை நெறிவிளக்கம் ஒதினான்-வண்ணமில்லாத்
 தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
 நண்பாய தத்துவநா தன்"

என இந்நூலாசிரியர் பெயர் கூறும் பாயிரச் செய்யுளொன்று சிந்தனையுரையிலும், அரசாங்கக் கையெழுத்துப் பிரதியில் இந்நூல் மூலத்தின் இறுதியிலும் காணப்படுதலாலும், உரை யாசிரியர் இந்நூலைத் துகளறுபோதத்தின் வழியமைந்தது எனக் குறித்தலாலும், இந்நூல் சீகாழித் தத்துவநாதர் என்பவரால் இயற்றப்பெற்றதென்றும், இந்நூலாசிரியராகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/16&oldid=513147" இலிருந்து மீள்விக்கப்பட்டது