பக்கம்:திருவருட் பயன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருந்திடு நாப் பித்தத்தின் பால்தானும் கைக்கும்; தவிர்ந்தபின்தான் தித்திக்கும் என இயைத்து, 'திருத்தத் தையுடைய நாவிலே பித்தம் மேலிட்ட காலத்து, (தித்திக் கும்) பாலும் கசக்கும்; பித்தம் நீங்கினகாலத்துப் பால் தித்திக்கும். அப்படிப்போல, ஆன்மாவிடத்திலே மலம் மேலிட்டால் சிவானுபவம் தோன்றது. மலம் நீங்கினல் சிவானுபவம் தோன்றும்’ எனப் பொருள் கொள்வர் சிந்தனேயுரையாசிரியர். 'உயிர் இருள்மலத்தினுற் பிணிப்புற்ற காலே மறைப் பாய் நின்ற இறைவனது அருளாற்றல், மிலம்,நீங்கிய காலே இனிய அருளாய் விளங்கும் என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இக்குறட்பா, ஒட்டென்னும் அணியாகும். இறைவனது அருள் எதற்கு? உயிராகிய நானே அறி வேன் என்றற்படும் இழுக்கென்னே? என்ருர்க்கு, அவர்தம் அறியாமையினேயெண்ணி இரங்குவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 63. காண்பான் ஒளியிருளிற் காட்டிடவுந் தான்கண்ட வீண்பாவம் எந்நாள் விடும். இ_ள்: ஒளிவடிவாகிய ஞானம், தன்னைக்கண்டறிதற் பொருட்டு, மலவிருளிலே மருண்டு கிடக்கின்ற உயிர்கட் குத் தன்னை வெளிப்படுத்தவும், அதனை நாடாது, உயிர் தானே காண்பதாகக் கண்டமையாலே வறிதே வரும் பாவம் என்ன பயனைச் செய்ததாய் வந்து முற்றும். ஒர் புலனுணர்வான் வரும் பாவம் போலாது வாளா வருதலின் விண்பாவம் என்றருளிச் செய்தார்.