பக்கம்:திருவருட் பயன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 பின், முன்பு:குவார் துன்பார்; இருளின் எழுஞ்சுடரின் பின் புகுவார். இன்புறுவார்-என இயைத்துப் பொருள்கொண்டார் நிரம்ப அழகிய தேசிகர். பின், முன் புகுதலாவது, முன்னிருத்தற்குரிய ஞானத்தைப் பின்னிட்டுத் தாம் அதற்கு முன் செல்லுதல். உயிர்கள் ஆணவ இருளிற்பட்டு அழுந்திய இருள்நிலையிலும் உயிர்களின் உள்ளத்தே சோதியாய்த் தோன்றி நல்லுணர்வு வழங்குதல் உயிர்க்குயிராய் விளங்கும் முதல்வனது அருளியல்பு என்பது அறிவுறுத்துவார், 'இருளின் எழுஞ்சுடர்' என அடைமொழி புணர்த்துக் கூறினர் என்பது, நிரம்ப அழகிய தேசிகர் கருத்தாகும். - 'நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதனே’’ (திருவாசகம்-சிவபுராணம்) எனவும், ‘சிந்தைதனே மயக்கந் திர்க்கும் ஏரொளியை (6-1-10 எனவும், இருளிடத் துன்னேச் சிக்கெனப் பிடித்தேன்' (திருவாசகம்-பிடித்தபத்து) எனவும் வரும் திருமுறைத்தொடர்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கனவாகும். இனி, எழுஞ்சுடரின் பின்பு:குவார் இன்புறு வார்; பின், இருளின் முன் புகுவார் துன்பார்’ என இயைத்து, ' விளக்கை முன்னிட்டுக்கொண்டு பின்னே செல்லுகிறவர் களேப் போல்வார், இன்பத்தைப் பொருந்தினவர்கள்; விளக்கைப் பின்னிட்டு இருட்டை முன்னிட்டுக்கொண்டு செல்லுகிறவர்களேப்போல்வார், துன்பத்தைப் பொருந்துவார் கள்’’ எனப்பொருள் கூறுவர் சிந்தனேயுரையாசிரியர். இறைவனது அருளே முன்னிட்டு அதன்வழியொழுகாது, சுடர்விளக்காகிய அதனைப்பின்னிட்டு, மின்மினியையொத்து நிலேயில்லாத தம் ஆன்ம போதத்தை முன்னிட்டு மெய்ப்