பக்கம்:திருவருட் பயன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பொருளேக்கண்டறிய முயல்வார் அறியாமையாகிய இருளிற் பட்டு அல்லலுறுவர் என்பதாம். “அருளாலே மெய்ப்பொருளே நோக்கும் விதியுடையேன்” (அற்புத-9) எனவரும் அம்மையார் வாக்கும், 'மதிதந்த ஆரூரில் வார்தேனே வாய்மடுத்துப் பருகியுய்யும் விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித்திக் காய்ந்தவாறே?’ (4-5.7) எனவரும் அப்பரருள்மொழியும், அருளால் எவையும்பார்’ என்றன்-அத்தை அறியாதே சுட்டி என்னறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லால்-கண்ட என்னையும் கண்டிலேன் என்னேடி தோழி’ எனவரும் தாயுமான அடிகள் வாய்மொழியும் ஈண்டு ஒப்பு நோக்கியுணரத் தக்கனவாம். அருளாற்பெறும் ஞானம் ஒன்றே போதும், அதனேத் துணையாகக் கொண்டு முதல்வனேயடைதல் எற்றுக்கு? என்பாரை நோக்கி அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும். 72. இருவர் மடந்தையருக் கென்யன்இன் புண்டாம் ஒருவன் ஒருத்தி யுறின். இ-ள்: இாண்டுபேர் மகளிர்க்குத் தம்புணர்ச்சியால் வரும்பயன் என்ன? ஒர் புருடனும் ஒர்மகளும் தம்மிற் புணர்வாாாயினன்றே இன்பமுண்டாவது என்க. உயிர்க்கும், அருட்கு முதலாய நேயம் வெளிப்படின் அல்லது இன்பம் உண்டாகாது என்பது பொருள்.