பக்கம்:திருவருட் பயன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 எனவரும் திருமுறைத் தொடர்களால் இனிதுணரப்படும். இறைவனுல் ஆன்மாவுக்கு இன்ப மேயன்றி, இறைவனுக்கு ஆன்மாவினுல் அடைதற்குரிய இன்பம் எதுவும் இல்லே யென்பது, தந்ததுன் றன்னேக் கொண்ட தென்றன்னேச் சங்கரா ஆர்கொலோ சதுரர் - அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது.நீ பெற்றதொன் றென்பால் ’’ - - \கோயிற்றிருப்பதிகம்.10) என அறிவினுற் சிவனேயாகிய மணிவாசகப்பெருந்தகையார் தம்மையாட்கொண்டருளிய இறைவனே நோக்கி வினவு முறை யில் அருளிய திருவாசகத்தால் நன்கு தெளியப்படும். உயிர்கள் நுகர்தற்குரிய சிவாதுபவம், சர்க்கரையும் அதனைப்புசிக்கிறவனும்போல வேறுபிரித்துணர நிற்குமோ? என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத்தும் முறையிலமைந் தது அடுத்துவரும் குறட்பாவாகும். - - 74. தாடலைபேற் கூடிஅவை தான்நிகழா வேற்றின்பக் கூடலைநீ ஏகமெனக் கொள். இ-ள்: தாள் தலை என்னுஞ் சொல்லிாண்டும் தம் பொருள் பிரிந்து தோன்ருது பொருந்தியவாறு போல், புணர்ச்சிக்கண் ஒருகாலும் உண்டாகாத வேற் றமையினையும் இன்பத்தினையுமுடைய கலப்பினே இறைவனேடு ஒன்ருத லெனக் கொள்வாயாக மாணவகனே! அச்சொற்கள் ஒரொருகாம் பிரிதலும், புணர்வால் தாம் பெறும் பயனின்மையுங் கருதி, இவை அன்ன அல்ல. என்பதற்கு நிகழ வேற்றின்பக்கூடல் என்று அருளிச்