பக்கம்:திருவருட் பயன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 யாய் (சிவஞானபோதம்-2-ம் சூத்திரம்) எனவரும் மெய் கண்டார் வாக்கை அடியொற்றியமைந்த்தாகும், கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளே வணங்காத் தலே’ எனத் தெய்வப்புலவர் அருளிய தாள், தலே என்னும் இரு சொற்களேயும் பொருட் பொருத்தமும் சொற் பொருத்தமும் ஒருங்கமையப் புணர்த்தமைத்துக்கொண்ட தொடர்,'தாடலே’ என்பதாகும். இதன்கண், "தாள்’ என்பது, எண்குணத்தா கிைய இறைவனது திருவடியையும், 'தலே' என்பது, அத் திருவடியினேச் சேர்ந்து வணங்கிச் சிவானந்தமாகிய பயனேப் பெற்றின்புறும் அடியார்களின் தலேயி னேயும் குறிப்பன. சிவ பெருமான் தன் திருவருளாகிய திருவடி ஞானத்தால் பக்குவமுடைய உயிர்களின் மலமாயா கன்மங்களே நீக்கித் தன்னுடைய திருவடியிலே பிரிவறக் கூட்டிக்கொள்வன் என்பதே சைவ சித்தாந்த சமயத்தினர் கூறும் முத்தியாகும். இவ் உண்மையை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, *தாடலே’ என வழங்கும் இத்தொடராகும். 'தாள் + தலே என்று நின்ற விடத்து ளவ்வும் தவ்வும் கெடாமல் 'தாடலே’ என்றே சீவித்து ஒன்ருய் நின்ற முறைமைபோல, ஆன்மாவுஞ் சிவமும் வேறறக்கலந்து இன்ப மாய் நிற்கிறதை ஒன்றெனக்கொள்' எனவரும் சிந்தனையுரை, ‘தாடலே’ என்பதன் பொருள் நுட்பத்தினே இனிது புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை உணர்ந்து மகிழத்தக்கதாகும். - - - "தாள் தந்தபோதே த8லதந்த எம்மிறை’ (திருமந்திரம்) எனவும், "தாழ்த்தச் சென்னியுந் தந்ததலேவனே'(திருக்குறுந்தொகை) எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்குக்கருதத்தக்கன.