பக்கம்:திருவருட் பயன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 ஆன்மா சிவத்தைக்கூடிய நிலையில், அக்கூட்டம் ஏகம் எனக்கொள்ளின், அக்கூட்டத்தில் ஆன்மாவும் சிவமும் ஒரு பொருளேயாய் விடுமோ, அன்றித் தம் தன்மைகெடாதே இரண்டாய் நிற்குமோ என வினவிய மானுக்கர்க்கு விளங்கவுணர்த்தும் முறையில் அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 75. ஒன்ருலும் ஒன்ரு திரண்டாலும் ஓசையெழா தென்ருலொன் றன்றிரண்டும் இல், இ-ள்: இறைவனையும் உயிரினேயும் ஒன்றென்போம் ஆயினும் பின்னர்ப் பொருந்தவேண்டுவதிலலை, இரண்டென் போம் ஆயினும் தம்முள் தாக்கிய ஒலியெழுதலைச் செய் யாத, ஆதலால் ஒருபொருளும் அல்ல, இரண்டு ஆவதம இல்லை என்க, இதனல், இறைவனேயும் உயிரினையும் எகம் என்பாாை யும் இரண்டென்பாளையும் மறுத்து அத்துவிதம் கூறப் பட்டது. அத்துவிதமாவது தம்மிற் கலப்பால் அங்கியமா யிருத்தல். விளக்கம்: ஆன்மா, சிவத்துடன் கூடும் நிலையில் தன் முதல் கெடுவதுமின்றி, வேறுபட்டு நீங்குவதுமின்றிச் சிவத் துடன் இரண்டறக்கலந்து நிற்கும் என்பது உணர்த்துகின்றது. ஒன்ருலும் இரண்டாலும் என்புழி ஆலும்’ என்பது ஆயின் என்னும் பொருள்தந்து நின்றது. ஒசைஒலி, சொல் என்ருல்.எனின். "ஆன்மாவுஞ் சிவமும் ஒருபொருளாகில், ஒருவருங் கூடவேண்டுவதில்லை; பெறுவானும் பேறுமில்லே, இரண்டாய் நிற்குமென்று சொல்லுவாயானுல், அங்கே சாயுச்சியமென்று சொல்லவேண்டுவதில்லை; ஒன்றுமல்ல