பக்கம்:திருவருட் பயன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 என இயைத்துப் பொருள்கொள்க. மூன்றய தன்மையாவது காண்பாணுகிய உயிர், காணுதற்குக் கருவியாகிய உணர்வு, காணப்படுபொருளாகிய சிவம் எனப் பகுத்துனருந் தன்மை, அவர் தம்மின் மிக முயங்கித் தோன்ருமையாவது, சிவன் என்றும் சீவனென்றும் பிரித்துணரவொண்ணுதவாறு இரண் உறக்கூடிய கலப்பினல் அவன் என்றும் தானென்றும் அறிய வாராத அத்துவிதமாகிய இயல்பு. இப்பேரின்பம் நுகர்வார் தாமேயுணருந் தன்மையதன்றிப் பிறர்க்கு இன்ன தன்மைத் தெனச் சொல்லால் வெளியிட்டுரைக்குந் தன்மையதன்று என்பார், சொல் என்’ என்றர். “தடக்கையின் நெல்லிக் கணியெனக் காயினன் சொல்லுவ தறியேன் வாழி (திருவாசகம்.திருவண்டப் எனவும், பகுதி) “எனேநாணென்ப தறியேன் பகலிரவாவதும் அறியேன் மனவாசகங் கடந்தான் எனேமத்தோன் மத்தனுக்கிச் சினமால் விடையுடையான் மன்னுதிருப்பெருந் துறை யுறையும் பனவன் எனச் செய்தபடிறறியேன் பரஞ்சுடரே” (திருவாசகம்.508) எனவும் அறிவினுற் சிவனேயாகிய மணிவாசகப்பெருமான் அருளிய அனுபவமொழிகள் சிவானந்தமாகிய பேரின்பம் சொல்லால் வெளியிட்டுரைக்க வொண்ணுத தென்பதன்ே அறிவித்தலறிக. இத்தகைய பேரின்பத்தின ஆன்மா இப்பிறப்பிலேயே அறிதல் இயலுமோ? என வினவிய மானுக்கர்க்கு அறிவு துத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 80 இன்பி லினிதென்றல் இன்றுண்டேல் இன்றுண்டாம் அன்பு கிலேயே யது.