பக்கம்:திருவருட் பயன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 'உண்மை ஞானத்தைப் பெற்ற சீவன் முத்தர்கள் முன்பு செய்துவந்த நியமங்களெல்லாம் வேண்டாமென்று விட்டு விடுவதுமில்லை; செய்துவர வேண்டுமென்று நியமித்துச் செய்வது மில்லை; உறங்குவார் கையிற் பதார்த்தங்கள் அவர்களே அறியாமல் தானே போனு ற்போல், அந்த உண்மை ஞான மொழிய மற்றுள்ள நியமங்கள் தானே போம் என்னும் முறைமையை அறிவித்தது’’ (சிவப்பிரகாசம்-94 ம் செய்யுள் உரை) என மதுரைச் சிவப்பிரகாசர் கூறிய விளக்கம் இங்கு மனங்கொள்ளத் தக்கதாகும். ஒண்பொருளாகிய சிவத்தினேயுற்ருர்க்கு ஞான ஞேயங் களேயன்றி வேருென்றுந் தோன்ருதோ? என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 79. மூன்ருய தன்மையவர் தம்மின் மிகமுயங்கித் தோன்ருத வின்பமதென் சொல். இ~ள், ஞாதுரு ஞான ஞேயம் என்னும் மூன்று வகைப் பட்டதன்மையும் சிவ சீவ பாவங்கள் இரண்டும் தம் மின் மிகவும் கூடிய கலப்பினும் ருேன்அதலைச் செய்யாத இன்பம்; அவ்விடத்து வார்த்தை பாது என்க. இதனால், அவ் ஆனந்த மிகுதியின் அதிசயங் கூறப் பட்டது. விளக்கம்: சிவானுபவமாகிய பேரின்பத்தின் மிகுதியினே உணர்த்துகின்றது. மூன்ருய தன்மை தோன்ருத இன்பம் எனவும், அவர் தம்மின் மிகமுயங்கித் தோன்ருத இன்பம் எனவும் இன் பத் திற்குத் தனித்தனி அடையாக்கி, இன்பம் அது, சொல் என்?