பக்கம்:திருவருட் பயன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சுடர் விட்டுளன் எங்கள் சோதி (3-54-5) எனவும், - 'காரொளிய திருமேனிச் செங்கண் மாலும் கடிக் கமலத் திருந்தயனுங் காணு வண்ணஞ் சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியைச் சிந்தைதனே மயக்கந் தீர்க்கும் ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற பேரொளியைப் பெரும் பற்றப் புலியூரானேப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” (6-1-10) எனவும், “ஒளியே யுன்னேயல்லால் இனியொன்று முனரேனே’ எனவும், (7–26-9) 'அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் (திருவாசகம்-திருவண்டப்பகுதி) 'சோதியே சுடரே சூழொளிவிளக்கே (டிை-458) எனவும்வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு உற்றுணர க் தக்கனவாகும். ஒண்பொருட்கண் உறுதலாவது, உயிர் தன் செயல் தவிர்ந்து, சிவத்தின் செயலில் அடங்குதல். உறுபயன்அங்ஙனம் பொருந்துதலால் வரும் பேரின்பம். அவ் இன்பம் ஒன்றுமே நிற்க, யோகம் முதலிய உயிரின் முயற்சிகள் எல்லாம் உறங்குவோர் கையிலுள்ள பொருள், உறக்கத்தில் அவரது கைப்பிடிதளரத் தானே நழுவுவதுபோல மெல்ல மெல்லத் தாமே நீங்கிவிடும் ೯Tಐr அறிவாயாக என்பார், 'கண்படுப்போர் கைப்பொருள் போற் காண்’ என்ருர் கண் படுப்போர்-உறங்குவோர். 'உறங்கினேன்கை வெறும்பாக் கெனவும் என்ருர் சங்கற்ப நிராகரணத்துள்.