பக்கம்:திருவருட் பயன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இதல்ை, நகா மகாங்களே முதலாக வுச்சரித்து வழங்குவது வீட்டினை யடைவோர்க்கு ஆகாதென்பது கூறப்பட்டது. விளக்கம்: திருவைந்தெழுத்தினச் சிகாரமுதலாக ஒதுதலே வீடடைவார்க்குரிய முறையென்பது உணர்த்து கின்றது. ஆணவமலத்தோடுங் கூடிநின்று அது பக்குவப்படு மளவும் ஆன்மாவைமயக்கி மறைப்பது திரோதாயி என்பது உணர்த்துவார், 'மாலார் திரோதம்’ என்ருர். மால்-மயக்கம். மலம்-ஆணவமலம். 'சி, மேலா மீளாவிடின், மால் ஆர் திரோதம் மலம் முதலாய் மாறுமோ - என இயையும். சிவமாகிய சிகாரம் மேலாம்வண்ணம் (திரோதம் மலம் என் பனவற்றைக் கீழாக்கி) மாறி உச்சரியாதொழியின்-மயக்கத் தினப் பொருந்திய நகாரம், மகாரம் இரண்டும் முதற் கண்ணதாய் உச்சரிக்கில் அவைகள் நீங்குமோ? நீங்கா, ஆகவே சிவ முதலாகவே உச்சரிப்பாய் என்ற வாறு மீளா விடின்-மாற்றி உச்சரியாதொழிந்தால். - இவனின்று நம் முதலா ஒதிலருள் நாடாது, நாடும் அருள் சிம் முதலா ஒதுநீ சென்று: (உண்மைவிளக்கம்-41) " ஆதி மலமிரண்டும் ஆதியாய் ஒதினால் சேதியா மும்மலமும் தீர்வாகா-போதம் மதிப்பரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி விதிப்படி ஒ(து) அஞ்செழுத்துமே ’ (உண்மைவிளக்கம்-43) எனவரும் மனவாசகங் கடந்தார் வாய்மொழிகளே உளங் கொண்டமைந்தது இக்குறட்பாவாதல் அறியத்தக்கதாம்.