பக்கம்:திருவருட் பயன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிரம்ப அழகிய தேசிகர்

திருவருட்பயனுக்கு அமைந்த உரைகளுள் நிரம்ப அழகிய தேசிகர் இயற்றியவுரை மிகவும் பழமைவாய்ந்ததாகும். இவ்வுரையினை இயற்றிய நிரம்பவழகிய தேசிகர் என்பவர், வேதாரணியம் என வழங்கும் திருமறைக்காட்டில் சைவ வேளாளர்க்குரிய குருமரபிற்பிறந்தவர். இவர்க்குப் பெற்றோர் இட்டபெயர் நிரம்பவழகியர் என்பதாகும். "நித்த மணாளர் நிரம்பவழகியர், சித்தத்திருப்பரால் அன்னே என்னும்" எனவரும் திருவாசகத் தொடரையுளங்கொண்ட இவருடைய பெற்றேர்கள் இறைவனுக்குரியதாகிய நிரம்ப அழகியர் என்ற பெயரை இவருக்கு இட்டழைத்தார்கள் எனக்கொள்ளுதல் ஏற்புடையதாகும். இவர் தமிழிலும் வட மொழியிலும் வல்லவர். சைவசித்தாந்த நூல்களில் நிரம்பிய தேர்ச்சியுடையவர். சிவஞானசித்தியார் சுபக்கத்திற்கும் திருவருட்பயனுக்கும் இவர் எழுதிய உரைகள் இவரது சைவசித்தாந்த நுட்பத்தையும் தமிழிலும் வடமொழியிலும் இவருக்குள்ள பரந்த நூற்புலமையையும் இனிது விளக்கும் முறையில் அமைந்துள்ளன.

இவர், கருணை ஞானப்பிரகாசரிடம் சிவதீக்கை பெற்றவர் என்றும், மதுரையையடுத்த திருப்பரங்குன்றத்தில் மடம் அமைத்துக்கொண்டு நெடுங்காலம் வாழ்ந்திருந்தவரென்றும், திருவிளையாடற்புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவரோடு உடன் பயின்றவரென்றும் இவரது வரலாறுணர்ந்தோர் கூறுவர். சைவசித்தாந்த நூலுரையாசிரியருள் ஒருவராகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/19&oldid=513150" இலிருந்து மீள்விக்கப்பட்டது