பக்கம்:திருவருட் பயன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 இம்மும்மலங்களும் சிவஞானிகட்கு ஆகா எனவுணர்ந்து தற் போதம் முளையாவாறு பரிகரித்துச் சிவஞானத்துள் அடங்கிச் 'சிவாநுபவம் சுவா நுபூதிகம் ஆமாறு ஞான நிலேயில் உறைத்து நிற்றல். அருளோடு ஒன்றி உறங்குதலாகிய இதனியல்பினே, ' சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளே வாங்காதானே (6-67-2) எனவரும் திருத்தாண்டகத் தொடராலும். ' அந்தக் கரணங்களோடே கூடாதே வாடாதே குழைந் திருப்பையாகில் ’’ (சித்தியார்-282) எனவரும் தொடராலும் சான்ருேர் அறிவுறுத்தியுள்ளார்கள். ‘ ஆரமுதா நீரருந்தி எச்சில ச்ச மகற்றி அடைக்காய்நற் கடுக்காய்சுக் கடுத்த தொன்றை மென்று கூரியபே ருணர்வுடனே தூங்கிக் கங்குல் குளிர் வெம்மைக் கிசைபூசை கொள்ள நல்கி ஒருணர்வு நிவேதியா துண்ணு வாய்மை யுடையையாய் உயர்ஞான போக முற்றுச் சாருமருள் நித்திரையு முற்றுணர்க ஞானச் சரியை இது மெய்கண்டான் சந்தானத்தே (போசனவிதி) 3. எனவரும் செய்யுள் அருள் நித்திரையின் இயல்பினேயும் அதனை அடையும் உபாயங்களேயும் பயனையும் நன்கு விரித் துரைப்பதாம். இவ்வதிகாரத்தின் முதற்குறளாகிய இது, தீங்குறு மாபை சேரா வகைவினே திரி.வி தத்தால் நீங்கிட நீங்கா மூல நிறை இருள் இரிய நேயத்(து) ஓங்குனர் வகத்த டக்கி உளத்துளின் பொடுங்க நேரே தூங்குவர் தாங்கி ஏகத்தொன்மையில் துகளிலோரே. - (சிவப்-93)