பக்கம்:திருவருட் பயன்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 விளக்கம் : செம்புலச் செல்வர்களாகிய சிவன் முத்தர்கள் தம் உள்ளம் ஐம்புலன்களேக்கண்டு அஞ்சி அகலுமாறு கூறுகின்றது. 'புலன் அடக்கித் தம் முதற்கண் புக்குறுவார், தலம் நடக் கும் ஆமைதக, போதார் என இயையும்; ஆமைதக- ஆமை யைப் போன்று. ஆமை தக, புலனடக்கிப் புக்கவர்கள் ஆமை தகப் புறம்போதார் என ஈரிடத்தும் சென்றியைந்தது. புறம்போதல்;. உள்ளத்தைப் புலன்வழியே புறத்திற் செல்லவிடல், போதார்.அவ்வாறு புறத்தே செல்லவிடார். புலனடக்கத்திற்கு ஆமை உவமையாதலே, ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து ’ (திருக்குறள்-126) என்புழி, திருவள்ளுவர் எடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும். இவ்வாறு புலன்களில் செல்லும் போதத்தை மீட்டு, அருளிலே திளேத்திருத்தல் யானென தென்னுஞ் செருக்கற்ற பெரியோர்களது இயல்பென்பதனே, ' உரனென்னும் தோட்டியா ைேரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற்கோர் வித்து ' (திருக்-24) எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவரும், ' மாண, வருதார் தாங்கிய கிளர்தா ரகலத்து, எறிவேல் இளேஞர் போலப் பொறிவாழ், புலப்பகை தாங்கிப் பிறப்பற எறியும், அறப்பேர் வாழ்க்கை” (ஞானமிர்தம் அகவல்-5) என ஞானுமிர்த ஆசிரியரும் இனிது புலப்படுத்தியுள்ளமை இங்கு எண்ணத்தகுவதாகும்.