பக்கம்:திருவருட் பயன்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 " தொண்டர்களிடத்தும் வானேர் தொழுந்திருமேனிதானும் அண்டருங் கண்டிலாத அண்ணலே எனவணங்கி வெண்டரளங்கள் சிந்த விழி மொழிகுழற மெய்யே கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தினேரே ’ - - (சிவப்-98) என்ருர் இதற்குப் பிரமாணம், தேவாரத்தில், " என்னிலாரும் எனக்கினி யாரில்லே என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்துபுக் கென்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே ’’ எனவும், திருமந்திரத்தில், . (5–21-1} ‘ உள்ளத்து முள்ளன் புறத்துள்ளன் என்றவர்க் குள்ளத்து முள்ளன் புறத்துள்ளன் எம்மிறை ” . (திருமந் 1532) எனவும், திருவருட்பயனில், - உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு எள்ளுந் திறமேதும் இல் ' (96) எனவும், இப்பொருள்பற்றி நின்றதென அறிக. அன்றியும் பூசாகரணத்திலும் இதுவேபொருள் என்பதைப்பற்றி, ‘ஆருயிர் சிவத்தைவிட்டுப் புறச்சிவம் அர்ச்சிப்பானேல் ஈருயிர்ச் சிவமுண்டாகில் இசைவதன் றெங்குமுள்ள தோருயிர்ச் சிவமே மற்றுப் புறச்சிவ முருச்சிவத்திற் பேருயிர்ச் சிவமே தென்னிற் பெருததுப் பிண்க்குநூலே (16) என்பதலுைம் அந்தச் சிவமுதல் உள்ளும் புறம்பும் ஒரு தன்மையாகக் கண்டவர்களே சிவஞானிகள் என்பதனக் குருமுகாந்தரமாகக்கண்டுகொள்க' (சிவப்பிரகாசம்.98 ஆம் செய்யுள் உரை) என மதுரைச் சிவப்பிரகாசர் கூறும் விளக்