பக்கம்:திருவருட் பயன்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 இதல்ை அவர் ஒர் தொழிலிக்னச் செய்யிலும் பிறி தொரு காமியத்தினக் கருதிச்செய்யார் என்பது கூறப் பட்டது. விளக்கம்: ஆன்மா தன் செயலறுதல் சிவத்தினையடை தலாகிய பயனேத்தரும் என்பது உணர்த்துகின்றது. உறுந்தொழிற்குப் பயன் உலகம், அதுபோல, வறுத் தொழிற்கு வாய்மை பயன்-என இயைக்க. இஃது எடுத்துக் காட்டுவமை, உறுந்தொழில்-ஆன்மா யான் எனது என்னும் செருக்குற்று முனத்துச்செய்யும் வின. வறுந்தொழில்-தான் என்னும் முனைப்பின்றி அருளின்வழி நின்று செய்யும் தானம் தவம் முதலிய செயல்கள். உலகம்-உலக வாழ்க்கையாகிய நுகர்ச்சி வாய்மை-அழிவில்லாத விட்டின்பம். இனி, உறுத் தொழில் என்பது சரியை கிரியா யோகங்களேயும், வறுத் தொழில் என்பது செயலறுதியையும், உலகம் என்பது பத. முத்தியினேயும், வாய்மை என்பது நேயமாகிய சிவத்தையும் குறிப்பனவாகக்கொண்டு, சரியை கிரியா யோகங்களுக்குப் பிரயோசனம் சாலோகாதிபதம்; செயலறுதிவந்த ஞாதாக்க ளுக்கு ஞேயம்ஒன்றுமே பிரயோசனம்' எனப்பொருளு ரைப்பர் சிந்தனையுரையாசிரியர். மெய்ம்மையுடைய பரம் பொருளே வாய்மையென்றர். 'தூஉய்ம்ை யென் தவாவின்மை மற்றது. வாஅய்மை வேண்ட வரும் (திருக்குறள்-364, எனத்தெய்வப்புலவர் பர்ம்பொருளை வாய்மை என்ற சொல் லால் வழங்கியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும். தன்செயலற்று மெய்ப்பொருளேத் தரிசித்தோர் தம்மைப் பிணித்துள்ள மூவதை வினைத்தொடர்களினின்றும் நீங்குமா றெங்கனம் என வினவிய் மானுக்கர்க்கு அறிவுறுத்துவது - ಘ வரும் குறட்பாவாகும்.