பக்கம்:திருவருட் பயன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

       "சாவமுன்னாட்டாக்கன் வேள்வித்தகர் தின்று நஞ்சமஞ்சி
        ஆவ வெந்தாயென் றவிதா விடு நம்மவரவரே
        மூவரென்றே எம்பிரானொடு மெண்ணி விண்ணாண்டு
                                                    [மண்மேல் 
        தேவரென்றே யிறுமாந்தென்ன பாவந் திரிதவரே"
                                 (திருவாசகம் --திருச்சதகம்.4)

எனவரும் மணிமொழியால் நன்கு புலப்படுத்தப்பட்டிருத்தல் கானலாம். (3)

ஆன்மாவை அடிமை என்று சொல்வானேன்? ஆன்மாத் தானே பிரமமாம் எனக் கொண்டால் வரும் குற்றம் யாது? என வினவிய மாணாக்கர்க்கு அறிவுரைகூறித் தெருட்டுவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும்.

         14. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுந்
             திண்டிறலுக் கென்னோ செயல்.

இ-ள்: பலகாலும் சகலாவத்தையால் தாம் கண்டறிந்த பொருள்களைச் சொப்பன அவத்தையில் திரிபுபடக் காணுந் திணிந்த வெற்றியினையுடைய உயிர்களுக்குச் செயலுடைத் தென்பது எவ்வண்ணமோ என்க.

திண்டிறல் என்பது, அன்மொழித்தொகையாய் இகழ்ச்சிக்குறிப்பு மொழியாய் நின்றது. திரிபுபடக் காண்டலாவது, நல்குரவாளர்தமைச் செல்வராகவும் செல்வர் தமை நல்கூர்ந்தவராகவும், உறுப்பில்லார்தமை உறுப்புடையராகவும், உறுப்புள்ளார்தமை உறுப்பில்லாராகவும் ஒன்று ஒன்றாக மாறுபடக்காண்டல் முதலாயினவெல்லாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/58&oldid=514470" இலிருந்து மீள்விக்கப்பட்டது