பக்கம்:திருவருட் பயன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



34

'ஒப்பு' எனப்பொருள் கொண்டு'மூவகை உயிர்களும் எல்லாக் கேட்டிற்கும் மூலமாகிய ஆணவமலத்தினையுடையராதலால், அம்முத்திறத்தாரும் தோன்றாத் துணையாய்நின்ற இறைவனுக்குக் கொத்தடிமை யுடையராய்த் தம்முள் வேற்றுமையின்றிச் சமமாவர் எனப்பொருள் கூறுதல் ஏற்புடையதாகும்.

உயிர்கள், தம்மை உடைய முதல்வனாகிய இறைவனொருவனுக்கன்றித் தம்முள் ஒருவருக்கொருவர் அடிமையல்ல என்பது,

  "அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
   அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற்
   பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
   காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்’
                                   (அற்புதத்திருவந்தாதி.3)

என அம்மையாரும்,

   "நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    ... ...  .....  .... .... .... ... .... ... ..
    தாமர்க்கும் குடியல்லாத் தன்மையான
    சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்மலர்ச் சேவடியிணையே குறுகினோமே" (6-98.1)

என அப்பரடிகளும்,

    யாமார்க்கும் குடியல்லோம் யாதுமஞ்சோம்; 
                                    (திருவாசகம் -34) 

எனத் திருவாதவூரடிகளும் அருளிய பொருளுரைகளால் இனிது புலனாம். படைத்தளிக்குந் தொழிற்குரியராய் மூல மலம் நீங்கப்பெறாதாராகிய அயனொடு மாலும் ஏனையமுப்பத்து மூவராகிய தேவர் முதலிய யாவரும் மக்கட்குலத்தாராகிய நம்மை ஒத்தவர்களே என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/57&oldid=514469" இலிருந்து மீள்விக்கப்பட்டது