பக்கம்:திருவருட் பயன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

விளக்கம். நனவிற் கண்டவற்றைக் கனவில் மாறுபடக் கொள்ளும் இயல்பினையுடைமையால் எதனையும் உள்ளவாறு அறிந்து செய்யமாட்டாத ஆன்மா பிரமம் அன்று என அறிவுறுத்துகின்றது.

நனவு-விழிப்புநில. கனவு-உறக்கநிலை நனவிலே கண்ட காட்சியை நாள்தோறும் மயங்கியறிகிற-அறிவின் திண்மையில்லாத ஆன்மாக்கள் முதல்வன் துணையின்றித் தாமே எதனையும் அறிந்து செய்ய வல்லன அல்ல என்பதாம்.

திண்திறல்-திண்ணிய வெற்றியையுடையது அன் மொழித்தொகை, ஈண்டு திண்மையில்லாதது என இகழ்ச்சிக் குறிப்பாய் நின்றது. திண்டிறலுக்குச் செயல் என்னோ என இயையும். (4)

உயிர் உணர்தற்றன்மையது. ஆதலால், அதுதானே எங்குமாய் நின்று அறியும் என்றல் அமையாதோ? என வினவிய மாணாக்கர்க்கு அதன் மாட்டாமையினை அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும்.


        15. பொறியின்றி யொன்றும் புணராத புந்திக்
            கறிவென்ற பேர்நன் றற.

இ-ள்: செவி முதலிய கருவிகள் கூடாமல் யாதொரு விடயமும் எய்தமாட்டாத உணர்வினையுடைய உயிர்களுக்கு நூல்வல்லோர் அறிவுடையன என்று இட்டபேர் மிகவும் அழகிது என்க.

பொறியின்றி ஒன்றும் புணராதென்பதனால், அது கூடிப் புணரும் என்பதாயிற்து, புநுதி ஆகுபெயர். நன்றென்பது முன்னையதுபோல் இகழ்ச்சிக் குறிப்பு மொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/59&oldid=514475" இலிருந்து மீள்விக்கப்பட்டது