பக்கம்:திருவருட் பயன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



46

பொ-ள். அனாதியே தொடங்கி இற்றைவரையும் எண்னிறந்த துன்பத்தினைத் தாங்கி கிற்கும், உயிர்கள். அந்தோ! எந்த நாளோ திருவருளாகிய ஞானத்தினக் கண்டு இடும்பை தீர்ந்து பேரின்பத்தை எய்தும் நாள்? என்க.

அந்தோ என்பது, இரக்கத்தின்கட் குறிப்பு. இதனால் உயிர்படும் துன்ப மிகுதிக்கு இரங்கிக் கூறப்பட்டது.

விளக்கம்: ஆன்மாக்கள் அனாதியே தம்மைப்பற்றியுள்ள பாசப் பிணிப்பினால் எண்ணில்லாத நெடுங்காலம் பிறவியுட்பட்டு வருந்துமாறு கூறுகின்றது

'உயிர், அன்று (முதல் இன்று) அளவும் அளவொன்று இல்லா இடர் ஆற்றும். அந்தோ அருள் தெரிவது என்று' என இயைத்துப் பொருள் கொள்க. அன்று என்றது, ஆணவ இருளிற்பட்டுள்ள தொன்மைநிலையாகிய கேவலத்தை. இன்று என்றது, அவ்விருள்நிலையின் நீங்கிப் பலவகைப் பிறவியுட்பட்டு ஓரளவு அறிவு விளங்கப்பெற்ற சகல நிலையினை. அளவு ஒன்று இல்லா இடர்-எல்லையற்ற பெருந்துன்பம். ஆற்றுதல்-பொறுத்து அனுபவித்தல்.

உயிர்கள் அனாதிதொடங்கி ஒரு சிறிது அறிவுவிளங்கப் பெற்ற இன்றுவரை எல்லையற்ற பெருந்துன்பங்களை அனுபவிக்கின்றன. (இவற்றின் துயர் நீங்க) இறைவனது அருளாகிய கண் விளங்கப்பெறுவது எந்நாளோ? என உயிர்களின் துன்பங்கண்டு ஆற்றாவுள்ளத்தினராகிய அருளுடையாரொருவர் இரங்கிக்கூறும் முறையில் அமைந்தது இக் குறட்பாவாகும்.

    "இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
     குற்றம் மறைப்பா னுடம்பு"        (திருக்குறள்-1029)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/69&oldid=514507" இலிருந்து மீள்விக்கப்பட்டது