பக்கம்:திருவருட் பயன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



-ெ

சிவமயம்

முன்னுரை

தில்லைவா ழந்தணர்தம் திருமரபில் தோன்றித்

     தென்றமிழும் வடமொழியும் திறமுறவே பயின்று 

மல்லல்நெடுந் தமிழாலிம் மாநிலத்தோர் வாழ

      மறைஞான சம்பந்தர் மலரடிகள் போற்றிச்

செல்வமலி சித்தாந்தச் செழும்பொருள் நூல் எட்டும்

      சீர்பெறவே அருள்செய்த உமாபதியின் திருத்தாள்

அல்லலெலாம் அகன்றொழியத் தலைக்கணியாக் கொள்ளும்

      அன்புடையார் சிந்தையினில் இன்பநிறைந் திடுமே.

உமாபதிசிவாசாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் என்னும் இந்நூல், திருக்குறள் போன்று குறட்பாக்களால் இயன்றது; பத்து அதிகாரங்களையுடைது. ஒவ்வோரதிகார மும் பத்துக் குறள்களேயுடையன. இதன்கண் நூறு குறட் பாக்கள் உள்ளன.

ஆசிரியர் திருவள்ளுவனார், 'அற முதலாகிய மும்முதற் பொருள்' எனத் தொல்காப்பியர் குறித்தவண்ணம் தம்நூலே மூன்றன்பகுதியாக (முப்பாலாக) இயற்றியுள்ளார். தொல்காப்பியனார்க்கும் திருவள்ளுவர்க்கும் பின்வந்த பெருமக்கள் உறுதிப்பொருள்களுள் மூன்றாவதாகிய இன்பத்தைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டாகப் பகுத்து, முன்னதனை இன்பம் என்றும், பின்னதனை. வீடு என்றும் பெயரிட்டு, உறுதிப்பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு என நான்காகக்கொண்டனர். நான்காவதாகப் பிரித்துரைக்கப்படும் வீடுபேறு, பேரின்பம் என்ற பெயரால் இன்பத்துள்ளேயே அடங்கும் என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/7&oldid=513075" இலிருந்து மீள்விக்கப்பட்டது