பக்கம்:திருவருட் பயன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

"ஒராதார் உள்ளத்தொளிக்கும் ஒளியானே’ (ஷை சிவபுராணம்) எனவும் வரும் திருவாதவூரடிகள் வாய்மொழிகளை யுளத்துட் கொண்டு உள்ளொளி எனக்குறித்தார். ஆவி-உயிர். உயிர்களை அனாதியேபற்றியுள்ள ஆணவ இருளானது, உயிர்க்குள் ஒளியாய்க்கலந்து நிற்கும் சிவஞானத்தின்மேற் படரும் வலியின்றி உயிரளவிலேயே அமைந்து நின்றது என்பார். ‘ஆவியிடை அடங்கி நின்றது என்றார், இன்றளவும்-(இரு வினையும் நேராதல் வேண்டும் என எண்ணும்) இந்நாள் அளவும்.

உயிர்கள்தோறும் உள்ளொளியாய்த்திகழும் சிவஞானத்துடன் உயிர்கள் பொருந்த ஒட்டாமல் அனாதியே உடனிருப்பதால் உயிர்களிடத்திலே பொருந்திநின்று, இறையருளால் இருவினையொப்பு ஏற்பட்டுத் தான் கழலும் பக்குவத்தினையுற்ற இந்நாள்வரையிலும் ஆன்மாவை மறைத்து நிற்பது ஆணவமலம் என்பதாம்.

ஆணவமலம் ஒன்றே உயிர்களை அனாதியே பிணித்து நிற்பதாயின் அதனை ஆன்மாக்கள் அறியாதிருப்பானேன்? என வினவிய மாணாக்கர்க்கு இருள்மலத்தின் மறைப்பாற்றலை அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும்.

       25. பலரைப் புணர்ந்துமிருட் பாவைக்குண் டென்றும்
           கணவர்க்குங் தோன்றாத கற்பு.

இ-ள்: எண்ணிலராகிய ஆன்மாக்களைப் பேதமறக் கலந்து இடையறாது நின்றாலும், இருள்மலமாகிய மகளுக்கு ஒருநாளுந் தனது தலைவராகிய ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது நிற்பதோர் நியமமுண்டு என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/79&oldid=515356" இலிருந்து மீள்விக்கப்பட்டது