பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9

 இந்திரர் முதலாய எண்டிசைக் காவலர்' தாம்செயும் தவத்திற்கேற்ப நலம்பெறச் செய்வது (85);
 சந்திரன் சூரியன் முதலிய தேவர்களும், அசுரர்களும், அந்தர வானவாசிகளும்’ வாழ்த்தி வணங்குவது (86);
 மணிநாகர், கருடர், காந்தருவர், விஞ்சையர், சித்தர்." மாமுனிவர் ஆகியோர் பரவுவது (87):
 நிருதி திக்கில் இருந்து இரவுப்போதில் உலவும் நிருதர், எப்போதும் பசிநோய் கொண்டுலவும் பிசாசர், யாழ்வல்ல கிம்புருடர் , இயக்கர் ஆகியோர் துதிப்பது (88):
 கின்னரம் என்னும் இசைக்கருவி வல்ல கின்னரர், பூதர், வித்தியாதரர், போகர் முதலியோர் பரவுவது (89) :
 நந்தியெம்பெருமானையுள்ளிட்ட சிவகணத் தலைவர்களின் மனக்கோயிலில் வீற்றிருந்தருள்வது (90) .
    (8)அம்மை வருடும் பதம்(91)
 மாதேவி எங்கள் மலைமங்கை என் அம்மை மலர்க் கையால் வருடுவது.
     (9)அடர்த்தருள் பதம்(92)
 மறலியை உதைத்தருள்வது; அரக்கனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க முயன்றபோது, அம்மலையைக் கால்விரலால் அழுத்தி அவ்விராவணனை மலையின் கீழ் வருந்து மாறு செய்து பின் அருளியது.
   (10) அடியவர்க்கருளும் பதம் 
        (93,94, 95,96,97)
 வஞ்சமற்ற நெஞ்சுடைய அடியார்களிடம் அழகுற விளங்குவது (93);

1. எண்டிசைக் காவலர் : கிழக்கு - இந்திரன்; தென்கிழக்குஅக்னி, தெற்கு - இயமன், தென்மேற்கு - நிருதி; மேற்குவருணன்; வடமேற்கு - வாயு; வடக்கு - சோமன், வட கிழக்கு - ஈசானன்.

2. விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடையே அந்தரத்தே உலவுவோர்;சூரிய வெப்பம் வேண்டும் அளவிற்கு மிகாத வாறு சூரியனோடு உடன் திரிவர்.

3. அனிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி,பிராகாமியம் ஈசத்துவம், வசித்துவம் என்னும் எண்வகைச் சித்திகளில் வல்லவர்,