பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

காலந்தோறும் வழிபாடு செய்யும் மெய்யடியார்களின் துயர் நீங்கத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, அறிவினுக்கு அறிவாய் மன்னி அவர்களின் மனத்தில் செறிவொழியாது உறைந் தருள்வது (94);

மறக்கருணையோடும் அறக்கருணையோடும் சிவபோகம் தந்து வாழ்விப்பது (96):

மெய்யடியார்கள் இரவும்பகலும் பிரியாது நின்று வழிபடுவர் எனும் பாராட்டுப் பெறுவது (97);

    (11) சைவசமய குரவர் நால்வர்க்கருளிய பதம் (98-1.06)

திருஞானசம்பந்தர் அருளிய இனிய பாடல்களின் ஞானமணம் கமழ்வது (98);

திருநாவுக்கரசர் அருளிய பதிகங்களின் இசை பரிமளிப்பது (99);

சுந்தரர் அருளிய இசைபொருந்திய திருப்பாட்டுக்களால் பரவப்படுவது (100);

திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகர் அருளிய இனிய மாணிக்கம்போன்ற சொன்மாலையை அணிவது (101);

நல்லூரில் திருநாவுக்கரசரது சென்னியில் சூட்டியது (102);

என்முடிமேல் நும்கால் படுகிறது, எடும்' என்று கூறி வேறோர் இடத்துப் படுத்தபோதும், அவ்விடத்தும் வலியச் சென்று சுந்தரர் முடிமேல் வைத்தருளியது (103) :

பரவையாருடைய ஊடலைத் தீர்க்கும் பொருட்டுச் சுந்தரருக் காக ஒருகாலைக்கு இருகால் திருவாரூர் வீதிகளில் நடந்தருளியது (104);

சுந்தரர்க்குக் கச்சூரில் பசிவந்தலைத்திட மனைதோறும் சென்று இரந்து சோறுபெற நடந்தருளியது (105);

திருநாவுக்கரசருக்குச் சோறும் தண்ணீரும் உண்பிக்கச் சென்று இருந்து உண்பித்து அவருடனே திருப்பைஞ்ஞீலிக்குச் சென்று மறைந்தருளியது (106);

  (12) மதுரையில் திருவிளையாடல் 
  நிகழ்த்திய பதம் (95, 107, 108) 


மெய்யன்புடைய பாண்டிய மன்னனுடைய மனம் மகிழ்ச்சி மிக இடத்தாளை யூன்றி வலக்காலைத் தூக்கி மாறியாடியது (95).