பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் 95.

என்றார். இங்கு அறுதொழிலோர் எனப்பட்டவர் நான் மறை என்னும் ஒத்தை ஒதல், ஒதுவித்தல், வேள்வி செய்: தல். செய்வித்தல், ஈதல்,ஏற்றது என்னும் ஆறுதொழிலைச். செய்யும் பார்ப்பனரைக் குறிக்கும். (மன்னன் கொடுங் கோலன் ஆனால், மக்கள் நலிவர், பார்ப்பனரும் சோற் றுக்கு அலைவர். சோற்றுக்கு அலையும் போது நான்மறை மறதிக்குள் மறையும்; மறப்பர்). -

இவ்வாறு அறுதொழிலோர் என்று பொருள் விளங்கபார்ப்பனர் நான்மறையைக் குறிக்க எழுதியமை போன்று முன்னரும்,

'அந்தணர் நூற்கும்'

என்பதை .

'அறுதொழிலோர் நூற்கும்”

என்று அமைத்திருப்பார். அவ்வாறு அமைக்காததே இது வேறு; அது வேறு என்று காட்டுகின்றது. இவ்விரண்டும் அடுத்தடுத்து வரும் அதிகாரங்களில் உள்ளவை. ஆகையால் இவ்வேறுபாடு காட்டப்பட்டது.

இவ்வமைப்புகள் அன்றித் திருவள்ளுவர், நூல்களாகப் பல்வகை நூல்களைக் குறித்தார்.

"நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' (322) என்று அறநூலைக் குறித்தார்.

நூ லாருள் நூ ல்வல்லன் ஆகுதல்” (683) என்று ஆட்சியியலார் நூலைக் குறித்தார்.

'நூ லோர் வளிமுதலா எண்ணிய மூன்று' (941) -என்று மருத்துவ நூலைக் குறித்தார். -