பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

எப்பால் நூலோர்க்கும்’ (533)

என்று உலகளாவிய பல துறை நூல்களையும் குறித்தார். இவ்வகையில் அந்தணர் நூல் என்பது ஒருவகை,

செந்தண்மைகொண்ட அந்தணராம் தமிழ்ச்சான்றோர் படைத்த அறநெறி நூல் என்றே பொருள். மக்கட் பிறப் பில் உயர்வு தாழ்வைக் காட்டும் நான்மறை ஒத்தைக் குறிக்காத,

இவ்வாறிருக்க உரையாசிரியர் அனைவரும் 'அந்தணர்க்குரித்தாகிய வேதத்திற்கும்'

என்று நான்மறையாகவே பொருள் எழுதினர். செந்தண்மை என்றதற்கு அம்+தண் அமைப்பில் செவ்விய தன்னருள் என்றெழுதிய இன்னோர் இங்கு ஒருங்கிணைந்தவராக வேதம் என்றமை, திருவள்ளுவருக்குப் பின் தமிழ் அறிஞ ரிடையே வேதம்’ எந்த அளவு ஆட்சி செய்தது. இன்னோரை ஆட்கொண்டிருந்தது' என்பனவற்றின் அடையாளமாகும். -

நான்மறை - வேதம் அளாதி என்பர். அஃதாவது தனக்கு மூலம்-ஆதி இல்லாதது தானே தனக்கு ஆதி யானது என்பது வடநூலார் கோட்பாடு. வேறு ஆதி இல்லாத வேதம் எவ்வாறு மன்னவன் செங்கோலை ஆதி யாகக் கொள்ளும்? இதனை வேதத்தார் ஏற்பாரா?

எனவே அந்தணர் நூல் என்றது தமிழ்ச் சான்றோரின் அற நூல்களேயாகும். இதனாலும் திருவள்ளுவர் நான் மறையைப் புறக்கணித்து ஒத்து’ என்று சொல்லாமல் பகுத்தறிவிற்கு ஒத்துவரும் மன்னவன் செங்கோலை ஆதி' என்றார். இஃது உண்மையுமாகும். தமிழ் மன்னர் பலரும் தமிழ்ப் பெருநூல்கள் தோன்றக் காரணமாக இருந்தவர்.