பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

பாவேந்தர் நோக்கு

பாவேந்தர் பாரதிதாசனார் பாரதியார் பால் நீங்காப் பற்று வைத்தார். ஏழத்தாழப் பாரதியாரைத் தம் வழி காட்டியாகக் கொண்டவர். கனகசுப்புரத்தினம் மாறிப் 'பாரதிதாசன்’ என்றானமையே இவற்றிற்குச் சான்று. அவர் பாரதியாரைப் பற்றி ஒரு சூழலில் சில பாடங்களை எழுதினார். முதற்பாடலின் முதற்பகுதி:

'ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு

நானிலத்தில் ஆள் இல்லை; கண்ணன் பாட்டு போல்நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?

புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே தேனினிக்கத் தருபவர் யார்'

என்பது. பாரதியாரின் உரைநடை நூல் ஞானரதம்', "ஞானம்' என்னும் தேரில் ஏறிப் பிரமலோகம், சத்திய லோகம், இந்திரலோகம் முதலியவைகட்குச் சென்று வருவதுபோல் எழுதப்பட்ட நூல்.

கண்ணனைப் பல நிலைகளில் வைத்துப் பல தலைப்புக் களில் பாடப்பட்ட பாடல்கள் கண்ணன் பாட்டு,

பாரதக் கதையில் தருமனும் துரியோதனனும் ஆடிய வட்டாட்டமும் அதில் திரெளபதி செய்த சூளுரையும் சபதமும் விளக்கப்படும் சிறு காப்பியம் பாஞ்சாலி சபதம்.

இவை மூன்றும் பாரதியாரின் நோக்கக் கருத்துக்களில் எழுந்தவை. ஆனால், இங்கு பாவேந்தர் பாடலில் கண்டவை பாவேந்தரின் நோக்கக் கருத்துக்களின் பதிவு

1. பாரதிதாசன்: பா. தா. கவி: 2 மகாகவி-5.