பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




துணிவுகொண்டு செம்புலச் செல்வரான திரு க. வெள்ளைவாரணனாரிடம் ஓர் ஒப்பீட்டுரை எழுதுமாறு தமது திருவுளக்குறிப்பை வெளியிட்டார்கள். அவர்தாமும் அங்ஙனம் ஓர் உரை எழுதவேண்டுமென முன்னமே கருதியிருந்தமை திருவருட்குறிப்பால் நிறைவுறுவது கண்டு பேருவப்போடு உரை வரைந்தளித்தார்கள்.


உந்திக்கும் களிறுக்கும் உரிய ஒப்பீட்டுரையாகிய இந்நூல் ஸ்ரீ காசிமடத்தின் அடக்க விலைப் பதிப்பாக உருப்பெற்று, சைவ சித்தாந்த மகாசமாசம் 6-3-82ல் ஸ்ரீ வாரணாசியில் நடத்தும் 76-ம் ஆண்டுவிழாவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.


இந்நூலுக்கு ஒப்பீட்டுமுறையில் உரைவிளக்கம் எழுதித் தந்ததோடு, நூல் அச்சாகும்போது உடனிருந்து அச்சுப் பிரதிகளைத் திருத்திக் கொடுத்த எனது உழுவலன்பரும் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்து முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்துத் தமிழியற்புல இணைப்பாளரும், திருமுறையாராய்ச்சிக் கலைஞருமாகிய திரு க. வெள்ளைவாரணனார் அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். .

அன்பர்கள் இவ்வரிய சித்தாந்த உரைநூலைப் பயின்று பொருளு ணர்ந்து மெய்ஞ்ஞானமாம் நலம்பெறுவதே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சுவாமிகள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்,

28–2—82,
செந்தமிழ்க்கல்லூரி,
திருப்பனந்தான்
இங்ஙனம்,
தா. ம. வெள்ளைவாரணம்.