பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


தோன்றும் சிலம்போசையின் வழியே திருவருளே நாடிச்சென்று கூடித் தற்போதமும் ஒக்கமுடியில், அப்பொழுதே அந்த ஓசை முடிந்தவிடமே இடமாகவுடைய இறைவன் அருட்சத்தியுடனே அம்பலமாகிய ஞானப் பெருவெளியிலே வத்து தோன்றி இவ்வான்மாவைப் பெருவிருப்புடனே மகிழ்த்து பிசின்ற ஒத்துக்கூடுவர் எ-று.

ஒசையினின் அந்தத் தானத்தான் - ஓசைமுடிந்தவிடமாகிய திரு வருளே இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவன். அந்தம் - முடிவு. தானம் - இடம். ஒசையினின் அந்தத்தானத்தான், அரிவையுடன் அம்பலத்தேவந்து, நத்தால் மகிழ்ந்து ஒத்தான் என இயைத்துப் பொருள் கொள்க. அரிவை - திருவருட் சத்தி, நத்தால் - பெருவிருப்புடன். நத்து விருப்பம், ஒத்தல் - நேர்படக் கூடுதல்.


கஅ. மருளுந் தெருளும் மறக்கும் அவன்கண்
அருளை மறவாதே யுந்தீபற
அதுவேயிங் குள்ளதென் றுந்தீபற.


இது, நிருத்தனைக் கும்பிட்டு நேர்பட விழைவோர் அவனது திருவருளை மறவாதிருத்தல் வேண்டும் என அறிவுறுத்துகின்றது.

'இ-ன் இறைவன் திருவருள் வழிநிற்பாயானால் உன்னுடைய மயக்க விகற்பங்கள் (மறப்பும் நினைப்பும்) அற்றுப்போம். அந்நிலை பெற இறைவனது திருவருளை மறவாதிருப்பாயாக. அத்திருவருளே இங்கு ஆன்மாவுக்குப் பற்றுக்கோடாகவுள்ளதென் றுணர்வாயாக எ-று.

உயிர்கட்கு இறைவன் திருவருளே சார்பாயுள்ளது என்னும் இவ்வுண்மையினை,

 “அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு.”

எனவரும் காரைக்காலம்மையார் அருளிச் செயலால் நன்குணரலாம்.

இத்திருவுந்தியாருடன் திருக்குறட் பொருளைத் தொடர்புபடுத்திக் காட்டும் உரைவிளக்கமாகத் திகழ்வது பின்வருந் திருக்களிற்றுப் படியாராகும்.