பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

75


42. இன்றிங் கசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும்
சென்று தொடருமவன் சென்றிடத்தே-என்றுந்தான்
தீதுறுவ னானாற் சிவபதிதான் கைவிடுமோ
மாதொருகூ றல்லனோ மற்று.

இது, பேரருளாளனாகிய இறைவன் மன்னுயிர்களை என்றுங் கைவிட மாட்டான் என்கின்றது.

(இ-ள்) இப்பொழுது இந்தத் தேகத்திலே நிற்கும்போதே கூடின. உணர்வற்ற புண்ணிய பாவங்கள் இரண்டும் இவன் பின்னொரு தேகத்தை எடுத்த பொழுதே ஒக்கச் சென்று கூடாநிற்கும். இவ்வாறு இவ்வான்மா இருவினைகளால் துன்புறுவனாயின் உயிர்க்குயிராகிய சிவன்தான் எக்காலத்தும் இவ்வான்மாவைக் கைவிட்டுவிடுவானோ? இவனுக்குத் தன் திருவருட்சத்தி பதியச் செய்து மலமாயை கன்மமாகிய பிணிப்பினை நீக்கி அருள்புரியும் சத்தியை ஒருபாகத்திற் கொண்டு திகழும் அம்மையப்பன் அல்லனோ? (அருளாளனாகிய சிவபதி ஆன்மாக்களை எந்நிலையிலும் கைவிடமாட்டான். ஆன்மாக்களின் வினைப்பயன்களை அருத்தித் தொலைப்பித்து நிட்டையிலே கூட்டி வீடு பேற்றினை அருள்வன் எ-று.

அசேதனமாம் வினைகள் ஆன்மாசென்ற இடத்தே தொடரும் எனவே, அவ்வினை தானே ஆன்மாவைச் சென்று பற்றுதல் இல்லை என்பது, ‘அசேதனமாம் இவ்வினைகள்’ என்ற அடைமொழியால் உய்த்துணரப்படும். அசேதனம் - உணர்வில்லாதது. சென்று தொட ருதல் அவனது ஆணையால். அவ்வினைப் பயனை ஆன்மா நுகரும்படி நியதி செய்து ஊட்டுபவனும் இறைவனே என்பதும் குறிப்பிளுற் புலப்படுத்தியவாறு.

“ஆணையின் இருவினையிற் போக்குவரவு புரிய, நீக்கமின்றி நிற்கும்” என்பது சிவஞானபோதம்.

இப்பாடற்கு மற்ருெருவகையிற் பொருள் கொள்ளுதலும் உண்டு.

“இப்பொழுது இவ்விடத்தில் சீவன்முத்தனானவன் செய்யப்பட்ட சடமாகிய இருவினையும் அநாதிமுத்தன் எனப்பொருந்தின நேயத்திலே சென்று பொருந்தும்; எக்காலமுந் தன்னுடைய போதத்தையும் தன்னையும் இழப்பாகக் கண்டவனானால் சிவனாகியபதி கைவிடாமல் ஏற்றுக் கொள்ளுவன், ஒன்றினுந் தோய்வில்லாத கர்த்தா இவனோடு கலப்பானோவென்னில், அருளேயுருவாகிய அம்மையுடன் கலந்திருக்கிற