பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. நா. பார்த்தசாரதி மர்ட்ட்ாமையால்-வேட்கை மிகுதியால் இளிைப்புற்று. நின்று உளைத்தற்கிடனை காட்டையும் அக்காட்டுப் பாலை, யில் எயினர் குடியிருக்கும் ஊர்களையும் கடந்து சென்ருல் அவற்றிற்கு அப்பால் ஐவனம் என்னும் மலைச்சாரலிற் பயி ராகும் நெல்லும், முற்றி விளைந்த கணுக்களையுடைய கருப் பஞ் சோலையும், கொய்யும் பருவத்துக்கு முற்றிய தினைப் புனங்களும், வளமான கொல்லைகளில் பயிர் செய்யப்பட்ட வரகுப் பயிரும், வெள்ளங்காயமும், மஞ்சட் கிழங்கும், அழகிய கொடியையுடைய கவலைக்கிழங்கும், வாழையும், கமுகும் தாழ்ந்த குழைகளையுடைய தென்னந்தோப்பும், மாவும், பலாவும் அடுத்தடுத்துச் சூழ்தலையுடைய தென்ன வன் சிறு மலை தோன்றும். அந்தத் தென்னவன் சிறுமலையை நுமக்கு வலப்பக்கத் திலே வைத்து இடப்பக்கத்தே போகும் வழியில் நீயிர் செல்லக் கருதுவீராயின் நீயிர் விரும்பிய மதுரை மாநகரினை அடைந்துவிடலாம். அந்த வழியில் செல்ல வில்லையாயின் சூலம் போலக் கவர்த்த இடப்பக்கத்து வழியாகப் போளுல் வண்டுகள் இசை முரலுதற்கிடமான ஏரிகளும் அவற்றின் நீர் பாயும் வயல்களும் குளிர்ந்த பூம்பொழில்களும் நிரம்பி அருநெறிகள் பலவும் தம்முட் கிடந்து மயங்கும் காட்டு வழியையும் கடந்து சென்ருல் திருமால் குன்றம் தென் படும். . . . அந்தத் திருமால் குன்றத்திற் செல்வீராளுல் பெரிய மயக்கத்தைத் தீர்த்து நன்கு தெளிவிக்கும் குகை ஒன்று இருப்பதைக் காண்பீர். கடவுள் தன்மையுடைய அக் குகையேயன்றியும் புண்ணியசரவணம் இட்டசித்தி, பவ. காரணி, என்னும் மூன்று பொய்கைகளும் உள்ளன. அவை தெய்வீக இயல்புள்ளவை. அவற்றுள் புண்ணிய சரவணத்தில் நீராடுவீராயின் இந்திரன் இயற்றிய ஐந்திர வியாகரண நூலின்கண் அறிவு பெருகும். பவகாரணியிற். படிந்து நீராடினலோ பழம் பிறப்பை அறிந்து கொள்ளு வீர். இட்டசித்தியில் நீராடுவீராயின் நீவிர் நினைந்தன. எல்லாம் கைவரப் பெறுவீர்.