பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறையோன் கூறிய மதுரை வழி - 105. இத்தகைய பிலத்தினுள்ளே புகுந்து மேற்கூறிய நன்மைகளை எய்துவதை நீர் விரும்புவீராயின் அத்திருமலை யின் கண் எழுந்தருளியிருக்கும் திருமாலைத் தொழுது அவன் திருவடிகளை மனத்தில் வைத்து மூன்று முறை அம் மலையை வலம் செய்தால்-பூமி கூறுபடும்படி அம்மலையில் பெய்யும் சிலம்பாற்றின் அகன்ற கரைக் கண்ணே புதிய நாளரும்புகள் மலர்ந்து மணம் பரப்புகின்ற கோங்க மரத் தின் நிழலில் முகில் போல் ஐம்பாலாகப் பகுக்கப்பட்ட கூந்தலையும் தொடியையும் வளையலையும் அணிந்த தோளை உடைய வரை மடந்தை ஒருத்தி பொற்கொடி மின்னலைப் போலத் தோன்றி நின்று தும்மைநோக்கி, "என் பெயர் வரோத்தமை! இம்மலையடிவாரத்தில் வாழ்வேன். இம்மை யின்பமும் மறுமையின்பமும் எனக் கூறுபடாமல் ஒரு செம்மையில் நிற்கும் அழிவற்ற பொருள்கள் யாவை? சொல்லுங்கள். இவ்வினவிற்கு விடை கூறியவர்க்கு நான் ஏவல் புரிவேன் எனக் கூறும். விடை கூறினல்தான்பிலத் தின் கதவைத் திறப்பேன் என்றும் வரோத்தமை தெய்வம் கூறும். நீயிர் விடை கூறினல் திறக்கப்படும் அக்கதவுகளைக் கடந்து சென்றீராயின் இரட்டைக் கதவம் ஒன்றுளது. அதன்மேல் வரையப்பட்ட பூங்கொடி போன்ற வரையர மடந்தை தோன்றி, முடிவில்லாத இன்பம் யாது'-என்ற கேள்விக்கு விடைகூறின் நீங்கள் விரும்பிய பொருளை உறுதியாகப் பெறுவீர் என்று அறிவிப்பாள். விடை கூற வில்லை எனினும் ஊறுசெய்யாள். உதவுவாள் நீயிர் செல்லவேண்டிய வழியிலே தடையின்றிச் செல்லவிடுவேன் போமின்'-என்பாள். அவளுக்கு விடை கூறினவர்க்கு முற்கூறிய மூன்று பொய்கைகளின் கரையை அவளே காட்டி மீள்வாள். ஐந்தெழுத்தானும், எட்டெழுத்தானும் வருமுறை மந்திரங்களை நினைந்து அப்பொய்கைகளில்: ஆடினராயின் அவற்ருலடையும் பயன் தவஞ் செய்தாரும் அடைதற்கரியதாகும். இனி அப்பொய்கைகளில் ஆடும் பேறுகளே நீயிர் கருதாவிடினும் அம்மலை மிசை, நின்ற திருமாலே நினைந்து வணங்கி அவன் திருவடிகளை உள்ளத்து